என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர் தேர்வு"
- பல்கலைக்கழக தடகள போட்டிக்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு செய்யபட்டார்
- இந்தியா முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்
கரூர்
சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் வரும், ஜன., 9 முதல் 13ம் தேதி வரை, 5 நாட்கள் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டி நடக்கிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் தமிழகம் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான கரூர் அரசு கலை கல்லூரி மாணவர் பிரதீப், 800 மீட்டர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர், மாநில தடகள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவர் பிரதீப்பை, கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
- இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு
- ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் முகம்மது அமீர் மும்முறை தாண்டுதல் போட்டியில் 2-ம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரையும், உடற்கல்வி ஆசிரியரையும் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் பாராட்டினர்.
- மாநில குண்டு எறிதல் போட்டிக்கு ராமநாதபுரம் மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
- அவரை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான இரும்பு குண்டு எறிதல் போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் பள்ளி பிளஸ்-2 மாணவர் முகம்மத் அகிப் முதல் பரிசு பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
அவரை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.






