search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Examination"

    • இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு
    • ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் முகம்மது அமீர் மும்முறை தாண்டுதல் போட்டியில் 2-ம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரையும், உடற்கல்வி ஆசிரியரையும் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் பாராட்டினர்.

    • மாநில ஜூடோ போட்டிக்கு பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வாகினார்.
    • இதில் மாவட்டத்தை சேர்ந்த 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அளவிலான ஜூடோ போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சேர்ந்த 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி யுவஸ்ரீ பிரபா 17 வயதுக்குட்பட்ட 63 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

    யுவஸ்ரீ பிரபா அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்.

    வெற்றி பெற்ற மாணவியையும், சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, நிரோஷாபானு ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் சாகுல்கமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்தலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஷாஜஹான், தலைமை ஆசிரியர் அஜ்மல்கான், உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

    ×