என் மலர்
நீங்கள் தேடியது "டவர் அமைக்கும் பணி"
- பொதுமக்கள் எதிர்ப்பால் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.
- தனியார் செல்போன் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தனியார் வீட்டின் மேற்கூரையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் உயரமே கிட்டத்தட்ட 20 அடி தான் இருக்குமென்றும், 20 அடி உயரத்தின் மீது செல்போன் டவர் அமைத்தால் அதன் கதிர்வீச்சுகள் சுற்றியுள்ள மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி முழுவதும் கடும் பாதிப்பினை உண்டாக்கு மென்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
டவர் அமைப்பதற்கான சுற்றுசூழல் மற்றும் நகராட்சியின் உரிய அனுமதி பெறாமலேயே செல்போன் அமைப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று வலியுறுத்தி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட கலெக்டர் பரிந்துரையின்படி கீழக்கரை தாலுகா வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழு நேரில் சென்று செல்போன் டவர் அமைக்கும் வீட்டினை ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு செல்போன் டவர் அமைக்க அனுமதிக்க கூடாது என்று வட்டாட்சியர் பழனிக்குமாரிடம் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு அங்கிருந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புகள் நிறைந்த இடங்களில் செல்போன் டவர் அமைக்கும் முயற்சி யினை தனியார் செல்போன் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






