என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்த தனியார் பள்ளிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வனத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வை தொடர்ந்து, வன உயிரி னங்களை வளர்ப்பதும் மற்றும் அவற்றிற்கு உணவ ளிப்பதும் குற்றம் என்பதை உணர்ந்து பொதுக்கள் பலர் பச்சைக்கிளிகளை வனத்துறையில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் வனத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஆணையின் படி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் மற்றும் வனப் பணியாளர்கள் குழுவாக சென்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்ட போது வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான பச்சைக் கிளிகள் 5 கூண்டில் அடைத்து வைத்திருந்தனர்.

    பச்சை கிளிகளை வளர்த்து வந்த சம்பந்தப் பட்ட பள்ளிக்கு ராமநாத புரம் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி ரூ.75 ஆயிரம் இணக் கட்டணமாக விதிக்கப் பட்டது. பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

    • வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.
    • தர்மர் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

    பரமக்குடி

    அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் பரமக்கு டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் நாடு முழுவதும் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தொடங்கியுள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரெயில்களையும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரெயில்க ளையும் இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தியா வின் புண்ணிய தலங்களில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் ராமேசுவரம் விளங்கி வருகிறது.

    நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு ராமேசு வரத்திற்கு தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லை. அகலப் பாதை மாற்றத்தால் ராமே சுவரம்-கோயம்புத்தூர், ராமேசுவரம்-பாலக்காடு, ராமேசுவரம்-மதுரை மற்றும் சில பிரபலமான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இங்கு வரும் பக்தர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் வியாபாரிகள், தொழி லாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா கின்றனர். ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை ரெயில்வே நிர்வாகம் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    மேலும் இடைநிறுத்தப் பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இது குறித்து ரெயில்வே முதன்மை நிர்வாக இயக்குனர் தேவேந்திர குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி யாலும், கழிவு நீர் ஆறாக தெருக்களில் ஓடுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    நேற்று முன் தினம் காய்ச்சலால் 31 பேர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று 41 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இதில் 11 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்ததில் டெங்கு அறிகுறி ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப் பட்டார். மேலும் மண்டபத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு பரமக்குடி அரசு மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் நகர், பரமக்குடி, ராமேசுவரம், திருப்புல் லாணி, ஏர்வாடி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் கொசுத் தொல்லை அதிகரித் துள்ளது. இதனால் இங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறிகளும் உள்ளன. எனவே மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் 20 நிமிடங்களுக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
    • மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மண்டபம்

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ெரயில் மார்க்கமாக ராமேசுவரத்திற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக அயோத்தி, புவனேஸ்வர், ஓகா ஆகிய வட மாநிலங்களுக்கு வாராந்திர ெரயில்கள், திருப்பதிக்கு வாரம் 3 நாள், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு தினசரி ெரயில்கள், கோவை வாராந்திர ெரயில், கன்னியாகுமரிக்கு வாரம் 3 நாள் ெரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் விழா காலங்களில் பல்வேறு நகரங்க ளில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இதனால் ராமேசு வரத்திற்கு மட்டும் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

    ெரயில்கள் இயக்கத்தின் போது ராமேசுவரம்- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி, இருமேனி ஆகிய 2 இடங்களில் ெரயில்வே கேட் மூடப்படு கிறது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், பிற நகரங்களில் இருந்து ராமேசுவரம் செல்லும் வாகனங்கள் ெரயில்கள் கடந்து செல்லும் வரை காத்திருக்கும் நிலை இதுநாள் வரை தொடர்கிறது. மதுரை- ராமேசுவரம் ெரயிலுக்கு கேட் மூடப்படும்போது இந்த வழித்தடத்தில் ெரயில் கடந்து செல்ல குறைந்த பட்சம் 10 நிமிடங்களாகிறது. அதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இரு புறமும் அணி வகுத்து நிற்கின்றன. அதைத் தொடர்ந்து அரசு பஸ் டிரைவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்கும் அரசு பஸ்கள் பயண நேரத்தை ஈடுகட்ட எதிரெதிரே முண்டியடிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

    இரவு நேரத்தில் ராமேசுவரம்- சென்னை, மதுரை- ராமேசுவரம் ெரயில்கள் சந்திப்பிற்காக மூடப்படும் இந்த கேட் 20 நிமிடங்களுக்கு பின் திறக்கப்படுகிறது. அவசர சிகிச்சை ஆம்புலன்சுகள் சில நேரங்களில் சிக்குவதால் உயிருக்கு போராடுபவரின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டு, தாமதமாகும் சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப்புளி அருகே ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.என். நாகேஸ்வரன் கூறுகையில், தற்போது பாம்பன் பாலத்தில் புதிய ெரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து ெரயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பாசஞ்சர் ெரயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதனால் தற்போது குறைந்த அளவு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் செல்கிறது. அதனால் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே ெரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. பாம்பனில் புதிய ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு ெரயில் சேவைகள் தொடங்கிய பிறகு அனைத்து ெரயில்களும் ராமேசுவரம் வரை செல்லும். அப்போது காலை, மாலை நேரங்களிலும் அதிக நேரம் ெரயில்வே கேட் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது. மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியே வாழ்வில் வெற்றி பெற செய்யும் என முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.
    • ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தனியார் அமைப்பின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சைலேந்திர பாபு பேசியதாவது:-

    எண்ணற்ற தமிழர்கள் உலகளவில் சாதனை படைத்து வருகிறார்கள். அதற்குக் காரணம் கல்வி தான். அதிலும் இனிவரும் காலங்களில் அறிவியல் நிறைந்த உலகமாக மாறப்போகின்றன. அந்த அறிவியலை நாம் முழு மையாக கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இலட்சியம், கனவு, நேரம் இவை மூன்றும் குறிக்கோளாக முன்வைத்து செயல்பட வேண்டும்.

    நேற்றைய சாதனை யாளர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அவர்களின் தனிப்பட்ட முயற்சியே வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

    அதனால் இன்றைய மாணவர்கள் நாம் ஏழ்மையில் இருக்கிநோம். அதனால் சாதிக்க முடியாது என்று எண்ணக்கூடாது.

    முயற்சி தான் ஒவ்வொருவருக்கும் வெற்றி. ஏழை மீண்டும் ஏழையாக வர முடியாது. ஆனால் முயற்சித்தால் வசதி படைத்தவர்களாக மாறிவிட முடியும். அதற்கு தேவை முயற்சி அந்த ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சாதனையாளர்கள்தான்.அதை சரித்திரமாக்குவது தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும். இன்றைய நாள் நமது லட்சியத்திற்கு ஏற்ற நாள் என உணர்ந்து செயல்பட்டு ஒவ்வொரு வரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எக்ஸ்போரியா குலோப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் சசிநாயர், நாகா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் மின் தடையால் கடும் அவதியடைந்தனர்.
    • தண்ணீர் மோட்டார்கள் இயக்க முடியாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்ட ராமேசுவரம் தீவுக்கு மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து உயர் மின்னழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் மின்னழுத்த கம்பத்தில் உள்ள பீங்கான் இன்சுலேட்டர் மழையின் காரணமாக வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று அதிகாலை 3 மணி முதல் இருளில் மூழ்கியது.

    பொதுமக்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் மின் தடையால் கடும் அவதியடைந்தனர். ஓட்டல்களில் உணவு தயாரிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தண்ணீர் மோட்டார்கள் இயக்க முடியாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மின் கம்பத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர். இருப்பினும் இன்று காலை 10 மணி வரை ராமேசுவரத்தில் மின் வினியோகம் வழங்கப்படவில்லை.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்துள்ள நிலையில் 7 மணி நேரமாக ஏற்பட்டுள்ள மின்தடை பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.

    • அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான்.
    • தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு கலந்து கொண்டு புதிய கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் காணொலியில் பேசியதாவது:-

    அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான். தனியார் அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல தூங்க விடாத கனவுகளை துரத்தி கொண்டே இருந்தால் நாளை பெரிய தலைவராகவோ, விளையாட்டு நட்சத்திரமாகவோ, நாட்டை ஆளும் பொறுப்பிற்கோ வர முடியும். அதற்கு அடித்தளம் அமைப்பது கல்வி தான்.

    இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்குரிய முயற்சிகளை தொடருங்கள். தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம். கல்வி நிச்சயம் உங்களை உயர்த்தும். நம்மால் முடியும் என நம்புங்கள். முன்னேறுவீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    • ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகையில் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதன் காரணமாக அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். வருடத்தின் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது.

    முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி மகாளய அமாவாசைக்காக வெள்ளிக்கிழமை முதலே பஸ், கார் மற்றும் வேன்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாதசுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.

    தொடர்ந்து பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடியபின் ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை சாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் பாதுகாப்புக்காக ராமேசுவரம் நகர் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடற்கரை கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமும், ரோந்து சென்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    • கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் கட்டிடக்கலை டிப்ளமோ பாடப்பிரிவு பொன்விழாவை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ளது.
    • அறக்கட்டளை முதல் கல்லூரியாக 1980-ல் ஆரம்பிக்கப்பட்டது முஹம்மது சதக் பாலி டெக்னிக் கல்லூரி ஆகும்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டார கிராமப்புற மக்களின் பொருளாதாரம், கல்வி மேம்பாட்டிற்காக வள்ளல் பாரம்பரியம் கொண்ட முஹம்மது சதக் குடும்பத்தா ரால் 1973-ம் ஆண்டு முஹம்மது சதக் அறக் கட்டளை தொடங்கப்பட்டது.

    போற்றுதலுக்கும் பெரு மைக்கும் உரிய முஹம்மது சதக் அறக்கட்டளையானது 50 ஆண்டு நிறைவடைந்து பொன்விழா காண்கிறது. இதையொட்டி தமிழ்நாட்டி லேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி என்ற பெருமையை உடைய முகமது சதக் அறக்கட்டளை யின் கீழ் இயங்கம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி 1984-ம் ஆண்டு முதல் இன்று வரை பல இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை தேசிய மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிறப்புமிக்க தரமான தொழில் கல்வியை பொறி யியல் கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரியும் வழங்கி வருகிறது.

    மேல்நிலைப்பள்ளி தொடங்கி பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பார்மஸி, பிசியோதெரபி, நர்சிங், மருத்துவ அறிவியல் கல்லூரி உள்பட 17 கல்வி நிறுவனங்களை எங்கள் அறக்கட்டளை கீழக்கரை, ராமநாதபுரம் மற்றும் சென்னையில் சீரோடும் சிறப்போடும் நடத்தி வருகிறது.

    சாதி, சமய, இன வேறு பாடின்றி சேவை மனப் பான்மையுடன் தரமான கல்வியை வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதே முஹம்மது சதக் அறக்கட்டளையின் நோக்க மாகும்.

    அறக்கட்டளை முதல் கல்லூரியாக 1980-ல் ஆரம்பிக்கப்பட்டது முஹம்மது சதக் பாலி டெக்னிக் கல்லூரி ஆகும்.பொன் விழாவையொட்டி தமிழ்நாட்டில் முதல் முறை யாக கட்டிடக்கலையில் டிப்ளமோ பாடப்பிரிவு நடப்பாண்டு தொடங்கப் பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவ தால் உப்பு உற்பத்தி அதி கரித்துள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாட்டு உப்பு நிறுவனம் வாலிநோக்கம் பகுதியிலும், தனியார் உப்பு உற்பத்தி நிறு வனங்கள் மூலம் திருப்புல்லாணி, தேவிபட்டினம், நதிப்பாலம், கோப்பேரிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.உப்பு உற்பத்தி காலம் வட கிழக்கு பருவமழை முடிந்த பின் மார்ச் முதல் அக் டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும்.

    உப்பளங்களில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும். இந்தாண்டு தென் மேற்கு பருவமழை காலங்களில் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதி கரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.

    ராமநாதபும் மாவட்டத்தில் ஒரு சீசனில் 2.5 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும். உப்பு உற்பத்தியில் மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் 29 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். தற்போது வெப்பம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தியும் அதிக ரித்திருப்பதால் உற்பத்தி யாளர்களும், உப்பள தொழிலாளர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    தற்போது உப்பளங்களில் உப்பு மலை போல் குவிக்கப் பட்டுள்ளது. டன் உப்பு சில மாதங்களுக்கு முன் வரை டன் ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் உப்பு ரூ 1200 முதல் ரூ 1600 வரை விற்பனை ஆகிறது. தற்போதுள்ள விலைவாசி மற்றும் கூலி ஆட்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட வைகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை போதுமானதாக இல்லை. ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    சீசன் முடிய சில மாதங்களே உள்ள நிலை யில் உப்பளங்களில் தொழி லாளர்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை யில் சரிவு ஏற்பட்டுள்ளது உரிமையாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

    • ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது லாந்தை கிராமம். இங்குள்ள ரெயில்வே தரை பாலத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

    இதன் காரணமாக லாந்தை, கண்ணனை, திருப்பணை, பெரிய தாம ரைக்குடி, சிறிய தாமரைக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர்.

    லாந்தை கிராமத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே பால பணிகள் 11 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் உள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் மழைகாலங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

    இதனால் லாந்தை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ராமநாதபுரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பாலத்தில் ஏறி, இறங்கி ரெயில்ேவ தண்ட வாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து லாந்தை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதைத் தொடர்ந்து இன்று லாந்தை கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் சுரங்கப்பாதை தண்ணீருக்கு இறங்கி நின்று ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தின் தரப்பில் அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினால் மட்டுமே ஆர்ப்பாட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடி கே.ஜே.கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பரமக்குடி அருகே உள்ள சுந்தராஜ பட்டினத்தில் 7 நாட்கள் நடைபெற்றது. இம்முகாமிற்கு பள்ளியின் தாளாளர் என்.ஜாஜஹான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்தலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்புரை ஆற்றினார்.

    இந்த 7 நாட்கள் சிறப்பு முகாமில் பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களில் உழவாரப்பணி, தீயணைப்பு மீட்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம், இலவச கண் சிகிச்சை முகாம், யோகாசனம், போதை விழிப்புணர்வு பேரணி, சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு பேரணி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றன. இம்முகாமில் மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு நோட்டீசுகளை பொதுமக்களிடம் வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் இந்திரஜித் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.

    ×