என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 பேருக்கு டெங்கு பாதிப்பு
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி யாலும், கழிவு நீர் ஆறாக தெருக்களில் ஓடுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
நேற்று முன் தினம் காய்ச்சலால் 31 பேர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று 41 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இதில் 11 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்ததில் டெங்கு அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இதில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப் பட்டார். மேலும் மண்டபத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு பரமக்குடி அரசு மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் நகர், பரமக்குடி, ராமேசுவரம், திருப்புல் லாணி, ஏர்வாடி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் கொசுத் தொல்லை அதிகரித் துள்ளது. இதனால் இங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறிகளும் உள்ளன. எனவே மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.






