என் மலர்
நீங்கள் தேடியது "Welfare Project Special Camp"
- கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
- முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.
பரமக்குடி
பரமக்குடி கே.ஜே.கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பரமக்குடி அருகே உள்ள சுந்தராஜ பட்டினத்தில் 7 நாட்கள் நடைபெற்றது. இம்முகாமிற்கு பள்ளியின் தாளாளர் என்.ஜாஜஹான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்தலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த 7 நாட்கள் சிறப்பு முகாமில் பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களில் உழவாரப்பணி, தீயணைப்பு மீட்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம், இலவச கண் சிகிச்சை முகாம், யோகாசனம், போதை விழிப்புணர்வு பேரணி, சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு பேரணி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றன. இம்முகாமில் மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு நோட்டீசுகளை பொதுமக்களிடம் வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் இந்திரஜித் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.






