search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் குருபூஜை விழாவில் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்-கலெக்டர்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசினார். அருகில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    தேவர் குருபூஜை விழாவில் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்-கலெக்டர்

    • தேவர் குருபூஜை விழாவில் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பா டுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தேவர் ஜெயந்தியின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இதில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசிய தாவது:-

    பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவுறுத் தப்பட்டுள்ளன.விதிமுறை களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவதை கருத்தில் கொண்டு பிற மாவட்டத்தினரும் நமது மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட விதி முறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு போல் பேனர் வைப்பதை தடுத்திடவும், அரசு கட்டடங்களில் விளம்பரம் செய்வதை தடுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×