என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • தர்வேஸ் முன்னிலை வகித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடந்த இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல், கூடுதல் உறுப்பினர் சேர்க்கை மற்றும் வருகிற 21-ந் தேதி

    தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலைமகள் பைனான்ஸ் மற்றும் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய செயலாளருக்கும் பொன்னாடை அணிவித்தார்.

    • பட்டா வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவை நிறுவனர் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ராமநாதபுரம் இந்திரா நகர் பகுதி குடியிருப்பு மக்களுக்கு பட்டா வழங்காத ஆதி திராவிட நலத்துறை தாசில்தாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்

    மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர், மாவட்டத் தலைவர் சபா தேவேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வழிவட்ட துரை பழனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்திரா நகர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

    • ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு அரண் மனை எதிரே அமைந்துள்ள அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் அலுவல கத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தபால்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் முன்கூட்டியே மனுவாக அளித்து பயன் பெறலாம்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப் பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் பெயர், பெறுபவரின் பெயர், ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகிய வற்றுக்கான விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இதேபோல சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்களாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாமிற்கு ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலால் திருப்தி யடையாதவர்கள் தங்களது குறைகளை மட்டும் அனுப்பி வைக்கலாம். அதன் பேரில் அளிக்கப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. தனியார் கூரிய ரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை தீத்தாரப்பன், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாத புரம் அஞ்சல் கோட்டம், ராமநாதபுரம் என்ற முகவ ரிக்கு வருகிற 22-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் உறையின் மீது தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், ஜூன் 23 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    • கீழக்கரை வலியுல்லாஹ் தர்கா கொடியேற்று விழா நடந்தது.
    • மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு ஓடைக்கரை பள்ளி ஜமாத்திற்கு உட்பட்ட மஹான் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்காவில் 849-ம் ஆண்டு கொடி யேற்று விழா நடைபெற்றது.

    கீழக்கரை புதுப் பள்ளி கதீப் மன்சூர் நூரி ஆலிம், ஜமாஅத் உலமா பெருமக்கள் ஆரிப் அன்வாரி ஆலிம், அப்துல் சலாம் பாக்கவி ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம், முகம்மது அஸ்லம் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக் காக சிறப்பு பிராத்தனை செய்தனர். இதையடுத்து தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத் பிரமுகர்கள் அப்துல் ஜப்பார், சிக்கந்தர் பாட்சா, சாகுல் ஹமீது என்ற ஹாஜா, கீழக்கரை புரவலர்கள் சீனாதானா செய்யது அப்துல் காதர், சதக் அப்துல் காதர் மற்றும் கீழக்கரை நகர துணை சேர்மன் ஹமீது சுல்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்ட னர்.

    கீழக்கரை ஒடைக்கரைப் பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் சீனி முஹம்மது, பசீருதீன், ஹாஜா, ராசிக் பரீத், சபிர்கு ஆகியோரும் 18 ஷுஹதாக்கள் ஜகாத் கமிட்டி உறுப்பினர்கள் ஹபீப் முஹம்மது சுஐபு, சுல்த்தான், யூசுப் அமீன், ஹபீப் முஹம்மது நெய்னா, குத்புதீன் ஆகியோரும், பாஹிர்தீன் தலைமையி லான எம். ஆர். எப், இளை ஞர் குழுவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தி ருந்தனர்.

    ஜமாஅத்தை நிர்வகிக்கும் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க உறுப்பினர்கள், மற்றும் சங்க மேலாளர் அப்துல் ரசாக் உட்பட அனைவரும் விழா சிறப்புற நடைபெறுவதற்கு ஆலோசனை வழங்கினர்.நகர் மன்ற உறுப்பினர்கள், நகர பிரமுகர்களும் கீழக்கரை அனைத்து ஜமா அத்தை சேர்ந்த பிரமுகர்கள், அரூஸ்யா பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழக்கரை காவல் துறையினர் சிறப்பாக செய்தனர்.

    18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரார்த்தனை நிகழ்வில் தினமும் இரவு மவ்லிது ஓதி நார்சா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.
    • இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகத்தின் 849-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா மே 21-ந்தேதி மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது.

    இந்த விழாவில் தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். கொடியிறக்கத்தை முன்னிட்டு நேற்று காலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில் மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அனைத்து சமுதாய மக்களுக்கும் நெய் சாதம் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    தொடரந்து கடலோர பகுதிகளில் வாழும் 9 கிராம மக்களுக்கு தேர்ச்சி வழங்கினர். மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக கடலாடி வட்டார ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தக்பீர் முழக்கத்துடன் தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பி னர்கள், தர்கா ஹக்தார்கள் கொடி இறக்கினர். இறக்கப் பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப் பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நள்ளிரவு வரை நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் (நெய்சோறு) பெற்று சென்றனர்.

    கொடியிறக்கத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ராமநாதபுரம் எஸ்.பி. தங்கவேலு உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

    ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணை தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்யது இப்ராகிம், சோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை, ஹாஜி செய்யது ஹூசைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹசன், முர்சல் இப்ராஹிம் ஆலீம், அமீர் ஹம்சா, சுல்தான் செய்யது இப்ராஹிம், அப்துல்கனி, கலீல் ரஹ்மான், செய்யது இப்ராகிம், அமின், சித்திக் லெவ்வை, அப்துல் ரஹிம் அம்ஜத் ஹுஸைன், லெவ்வைக்கனி, செய்யது அபுதாஹிர் ஆலிம், செய்யது இஸ்காக் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்தனர்.

    • கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தலில் அறிவித்த 8 திட்டங்கள் நிறைவேறாமல் எட்டாக்கனியாக உள்ளது.
    • இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.தி.மு.க.ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடியப்போ கிறது. ஆனால் கீழக்கரை நகராட்சியில் எந்த வளர்ச்சி, முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

    இது குறித்து கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். முதற்கட்டமாக கீழக்கரை நகருக்கு தரமான நவீன வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைத்து தருதல், மகளிருக்கு பல்வேறு வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மூலம் சொந்த கட்டிடத்தில் அமைத்து தருதல், கீழக்கரை நகரில் நவீன நூலகம், இளை ஞர்களுக்கு விளையாட்டு மைதானம், கீழக்கரைக்கு சுகாதார நலனை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்டம், நகரில் விரிவடைந்த பகுதிகளில் உடனடியாக தெரு விளக்கு, கீழக்கரையில் மின் கட்டணம் செலுத்தும் வசதியை நகருக்கு கொண்டு வருதல் ஆகிய 8 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், நகர் மன்ற சேர்மன் முன்வர வேண்டும். உடனடியாக பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை அகதி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மண்டபம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் வின்சென்ட் மெரிண்டா (வயது46). இவா் மண்டபத்தைச் சோ்ந்த சோனை முத்துவின் விசைப்படகின் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்தநிலையில், வின்சென்ட் மெரிண்டா உள்ளிட்ட சிலா் கடலுக்குள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினா்.

    இதையடுத்து மீன்பிடிக்க சென்ற வின்சென்ட் மெரிண்டா, மோரிஸ், காா்த்திக், பரமசிவம், பாபு ஆகிய 5 பேருக்கும் படகு உரிமையாளரான சோனைமுத்து பணம் கொடுத்தார். அதை 5 பேர் பிரித்து எடுத்துக்கொண்டனர். ஆனால் கார்்த்திக் கூடுதலாக பணம் கேட்டு தகராறு செய்தார்.

    அப்போது கார்த்திக், அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் பாட்டிலால் வின்சென்ட் மெரிண்டாவை தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து மண்டபம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாா் வழக்குப்பதிவு செய்து மீனவா்கள் காா்த்திக், சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தாா்.

    • தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தினமும் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த படகிலிருந்த 5 மீனவர்களும், ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நடுக்கடலில் நின்ற அந்த படகை இலங்கை கடற்படையினர் பார்த்தனர்.

    அவர்கள் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர். பின்பு சந்தேகப்படகு என்று கருதிய இலங்கை கடற்படையினர், அதனை பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று 558 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 9 பேர் சென்றார்கள்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, அவர்களுடைய படகு பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் படகுடன் நடுக்கடலில் இருந்துள்ளனர். பழுதான அவர்களது படகு காற்று காரணமாக நெடுந்தீவு பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகை பார்த்தனர். இதையடுத்து படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். படகு பழுதானதால் அங்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இருந்த போதிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்பது தெரியவரும். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர் தலைவர் கோபி தலைமையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை அருகே கோட்டைவாசல் விநாயகர் கோவிலில் அவரது பெயரில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, மண்டபம் மேற்கு வட்டார தலைவர் அன்வர் அலி நத்தர், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் காவல்துறை அதிகாரி முருகேசன், சிறுபான்மை துறை உதவி தலைவர் பனைக்குளம் ஹனீப் கான், மாவட்ட பொதுச்செயலாளர் மோதிலால் நேரு, அழகன்குளம் அல் அமீன், பொன்னுச்சாமி, பாண்டி, நகரச் செயலாளர் முகவை பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி தொடங்கியது.
    • தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோச மங்கையில் மிகப் பழமையான சிவன்கோலிலான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோவில் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் வராஹி அம்மனுக்கு தனி கோவில் உள்ளது.

    இதிலுள்ள அம்மன் சுயம்புவாக உருவாகியதால் ஒற்றைக்கல்லில் வடிவ மைக்கப் பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய முதல் வளர்பிறையில் வராஹி அம்மன் கோவில்களில் ஆஷாட நவராத்திரி தொடங்கி 9 நாட்கள் கொண்டா டப்படுவது வழக்கம்.

    அதன்படி திருஉத்தர கோசமங்கையில் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அதிகாலை, நண்பகல், இரவு என 3 முறை பால், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷே கமும், புதிய அலங்காரமும் செய்யப்பட்டது.

    இதுபோன்று இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்குமம் அலங்காரம், தேங்காய்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், காய்கனி உள்ளிட்ட அலங்காரங்கள் என ஒவ்வொரு நாட்களாக 8 நாட்களும், 9வது நாளான 26ம் தேதி வளையல், வடை மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.

    • கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசு விழாக்களை புறக்கணிக்க வருவாய் துறை அலுவலர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
    • அரசியல் பிரமுகர்கள் மன்னிப்பு கேட்கும் வரையில் விழாக்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் கூறியதாவது:-

    ராமநாதபுரத்தில் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் அங்கு சமாதானம் செய்து கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன கீழே தள்ளி விடப்பட்டது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைய செய்தது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி சார்ந்த அரசு விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டரை அவமரியாதை செய்து கீழே தள்ளிய அரசியல் பிரமுகர்கள் மன்னிப்பு கேட்கும் வரையில் விழாக்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை அருகே இளம்பெண்ணிடம் 6¾ பவுன் நகை திருடப்பட்டது
    • இதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வடக்கு புதிய தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். மனைவி வித்யா(வயது33). இவர் நேற்று மாலை உறவினர் வீட்டு விஷேசத்திற்கு புறப்பட்டார். ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள தனியார் மகாலுக்கு அருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வித்யா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6¾ பவுன் தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×