search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஷாட நவராத்திரி தொடக்கம்
    X

    ஆஷாட நவராத்திரி தொடக்கம்

    • வராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி தொடங்கியது.
    • தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோச மங்கையில் மிகப் பழமையான சிவன்கோலிலான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோவில் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் வராஹி அம்மனுக்கு தனி கோவில் உள்ளது.

    இதிலுள்ள அம்மன் சுயம்புவாக உருவாகியதால் ஒற்றைக்கல்லில் வடிவ மைக்கப் பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய முதல் வளர்பிறையில் வராஹி அம்மன் கோவில்களில் ஆஷாட நவராத்திரி தொடங்கி 9 நாட்கள் கொண்டா டப்படுவது வழக்கம்.

    அதன்படி திருஉத்தர கோசமங்கையில் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அதிகாலை, நண்பகல், இரவு என 3 முறை பால், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷே கமும், புதிய அலங்காரமும் செய்யப்பட்டது.

    இதுபோன்று இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்குமம் அலங்காரம், தேங்காய்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், காய்கனி உள்ளிட்ட அலங்காரங்கள் என ஒவ்வொரு நாட்களாக 8 நாட்களும், 9வது நாளான 26ம் தேதி வளையல், வடை மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.

    Next Story
    ×