search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Belt"

    • பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.
    • வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அங்கு செட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுநகர் உள்ளது. இங்கு உள்ள ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட இடத்தில் பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.கடந்த ஆண்டு காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டம் நடத்தினர். ஆனால் பட்டா வழங்கும் இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை. இந்நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென அந்த இடத்தில் கும்பலாக சென்று குடி ஏறும் போராட்டம் செய்து வருகின்றனர்.

    • பட்டா வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவை நிறுவனர் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ராமநாதபுரம் இந்திரா நகர் பகுதி குடியிருப்பு மக்களுக்கு பட்டா வழங்காத ஆதி திராவிட நலத்துறை தாசில்தாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்

    மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர், மாவட்டத் தலைவர் சபா தேவேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வழிவட்ட துரை பழனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்திரா நகர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

    • 100 பேருக்கு வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் தனியார் பள்ளியில் ஸ்ரீ காஞ்சி போதிதர்மர் சிடோரியு கராத்தே பள்ளியில் பயிற்சி பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் மாநில செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பள்ளியின் மாநில பொருளாளர் மணி முன்னிலை வகித்தார்.

    பள்ளியின் மாநிலத் துணைத் தலைவர் பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சோளிங்கர் நகராட்சி துணைத் தலைவர் பழனி, பள்ளியின் மாநில தலைவர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 100 மாணவ, மாணவிகளுக்கு கருப்பு, பச்சை, மஞ்சள், ப்ளூ, ஆரஞ்சு உள்ளிட்ட பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

    இந்தப் பள்ளியின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற மோகனப்பிரியா, சீனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பொழிலரசு, வெண்கல பதக்கம் வென்ற தாமரைச்செல்வன் ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    இதில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    ×