இளம்பெண்ணிடம் நகை வழிப்பறி

மதுரை அருகே இளம்பெண்ணிடம் 6¾ பவுன் நகை திருடப்பட்டதுஇதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணிடம் நகை வழிப்பறி
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வடக்கு புதிய தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். மனைவி வித்யா(வயது33). இவர் நேற்று மாலை உறவினர் வீட்டு விஷேசத்திற்கு புறப்பட்டார். ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள தனியார் மகாலுக்கு அருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வித்யா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6¾ பவுன் தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com