search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு
    X

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகத்தின் 849-வது ஆண்டு சந்தனக் கூடு திரு விழாவையொட்டி நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற கொடிஇறக்கம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.
    • இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகத்தின் 849-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா மே 21-ந்தேதி மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது.

    இந்த விழாவில் தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். கொடியிறக்கத்தை முன்னிட்டு நேற்று காலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில் மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அனைத்து சமுதாய மக்களுக்கும் நெய் சாதம் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    தொடரந்து கடலோர பகுதிகளில் வாழும் 9 கிராம மக்களுக்கு தேர்ச்சி வழங்கினர். மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக கடலாடி வட்டார ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தக்பீர் முழக்கத்துடன் தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பி னர்கள், தர்கா ஹக்தார்கள் கொடி இறக்கினர். இறக்கப் பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப் பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நள்ளிரவு வரை நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் (நெய்சோறு) பெற்று சென்றனர்.

    கொடியிறக்கத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ராமநாதபுரம் எஸ்.பி. தங்கவேலு உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

    ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணை தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்யது இப்ராகிம், சோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை, ஹாஜி செய்யது ஹூசைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹசன், முர்சல் இப்ராஹிம் ஆலீம், அமீர் ஹம்சா, சுல்தான் செய்யது இப்ராஹிம், அப்துல்கனி, கலீல் ரஹ்மான், செய்யது இப்ராகிம், அமின், சித்திக் லெவ்வை, அப்துல் ரஹிம் அம்ஜத் ஹுஸைன், லெவ்வைக்கனி, செய்யது அபுதாஹிர் ஆலிம், செய்யது இஸ்காக் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்தனர்.

    Next Story
    ×