என் மலர்
நீலகிரி
வேல் யாத்திரைக்கு தடை விதித்ததை கண்டித்து ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 204 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் வேல் யாத்திரை நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கியபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி திடலில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்காக நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் கார்கள், லாரிகளை மறித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
இதில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் நிர்வாகிகள் கலந்துகொண்டு தமிழகத்தில் பா.ஜ.க.வினரின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் தமிழக பா.ஜ.க. தலைவரை கைது செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் ஊட்டி நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட பா.ஜ.க.வினர் 204 பேரை கைது செய்து பஸ்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என்று கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
கூடலூர்:
கூடலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி யானை- மனித மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கூடலூர் கோக்கால் பகுதியை சேர்ந்த கமலாட்சி (வயது 58) என்பவரும், 2-ந் தேதி கூடலூர் அருகே குயிண்ட் பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவரும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அத்துடன் கூடலூர், ஓவேலி வனச்சரகங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள கோக்கால், காந்திநகர், குயின்ட், ஆத்தூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களை வனத்துறையினர் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வனத்துறையினர் நேரடியாக சென்று பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிராமப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தேயிலை தோட்ட வேலைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் தனியாக நடந்து செல்ல வேண்டாம். ஒரு குழுவாக இணைந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்லவேண்டும்.
மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பின் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுப்பதுடன், பொதுமக்களை உஷார் படுத்த வேண்டும். இரவில் வீடுகளை விட்டு வெளியே வரும்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் காட்டு யானை களுக்கு மிகவும் பிடித்தமான வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை குடியிருப்பு பகுதியில் பயிரிடக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
20 சதவீத போனஸ் வழங்கக்கோரி அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி மற்றும் நடுவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப்., உள்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணிக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு உள்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். மேலும் நெல்லியாளத்தில் தோட்டத்தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர். இதற்கு பெரியசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமு, அருள்குமார், சந்திரசேகர், சதாசிவம், டேவிட் உள்பட நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள டேன் டீ கோட்ட அலுவலகம் முன்பு சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. தலைவர் கரு வெற்றிவேல் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என்றனர்.
காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என்று கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
கூடலூர்:
கூடலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி யானை- மனித மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கூடலூர் கோக்கால் பகுதியை சேர்ந்த கமலாட்சி (வயது 58) என்பவரும், 2-ந் தேதி கூடலூர் அருகே குயிண்ட் பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவரும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அத்துடன் கூடலூர், ஓவேலி வனச்சரகங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள கோக்கால், காந்திநகர், குயின்ட், ஆத்தூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களை வனத்துறையினர் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வனத்துறையினர் நேரடியாக சென்று பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிராமப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தேயிலை தோட்ட வேலைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் தனியாக நடந்து செல்ல வேண்டாம். ஒரு குழுவாக இணைந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்லவேண்டும்.
மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பின் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுப்பதுடன், பொதுமக்களை உஷார் படுத்த வேண்டும். இரவில் வீடுகளை விட்டு வெளியே வரும்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் காட்டு யானை களுக்கு மிகவும் பிடித்தமான வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை குடியிருப்பு பகுதியில் பயிரிடக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி யானை- மனித மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கூடலூர் கோக்கால் பகுதியை சேர்ந்த கமலாட்சி (வயது 58) என்பவரும், 2-ந் தேதி கூடலூர் அருகே குயிண்ட் பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவரும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அத்துடன் கூடலூர், ஓவேலி வனச்சரகங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள கோக்கால், காந்திநகர், குயின்ட், ஆத்தூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களை வனத்துறையினர் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வனத்துறையினர் நேரடியாக சென்று பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிராமப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தேயிலை தோட்ட வேலைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் தனியாக நடந்து செல்ல வேண்டாம். ஒரு குழுவாக இணைந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்லவேண்டும்.
மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பின் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுப்பதுடன், பொதுமக்களை உஷார் படுத்த வேண்டும். இரவில் வீடுகளை விட்டு வெளியே வரும்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் காட்டு யானை களுக்கு மிகவும் பிடித்தமான வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை குடியிருப்பு பகுதியில் பயிரிடக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாரதிய ஜனதா வேல் யாத்திரை குறித்து ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
ரூ.189.33 கோடி மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
* நீலகிரியில் கொரோனாவுக்கு இதுவரை 39 பேர் இறந்துள்ளனர்.
* 6,363 காய்ச்சல் முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.
* நீலகிரியில் ரூ.447 கோடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
* நீலகிரி மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இனி கோவை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.
* மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
* அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள். அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
ரூ.189.33 கோடி மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
* அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவு என கூறினார்கள். ஆனால் அங்கு தற்போது அதிகரித்துள்ளது.
* கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பரிசோதனை நடைபெறுகிறது.

மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஊட்டி:
இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில், பார்த்து மகிழ பல இடங்கள் உண்டு. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா பரவலை தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. மழை பெய்யும்போது இங்குள்ள மலையில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதை பார்க்கவே அழகாக இருக்கும். மழை இல்லாததால் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்படும் இடங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பருவமழை தொடங்கி பெய்து வருவதால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தொடங்கி, ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அவற்றை பார்க்க வெள்ளியை உருக்கியதுபோல் இருப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் தங்களின் செல்போன்கள் மற்றும் கேமராக்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து செல்கிறார்கள்.
குறிப்பாக மரப்பாலம் உள்பட பல இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகளும் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த மழை காரணமாக குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மசினகுடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பகத்தின் அருகே மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்பட சுற்றுவட்டார கிராமபுறங்களில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் தனியார் தங்கும் விடுதிகளும் அதிகளவு உள்ளது. இதேபோல் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வது உண்டு. நேற்று முன்தினம் மாலை வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அப்போது அங்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் பீதியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அந்த யானை தொழிலாளர்களை நோக்கி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உஷார் அடைந்ததுடன், கூச்சலிட்டபடி அந்த காட்டு யானையை துரத்தினர். பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று அடிக்கடி சுற்றி வருகிறது. இதற்கு ரிவால்டோ என பொதுமக்கள் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகும் குணம் கொண்டதாக மாறி விட்டது. இதுவரை யாரையும் விரட்டியதாக அல்லது தாக்கியதாக தகவல் இல்லை என்றனர்.
குன்னூரில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இளைஞர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்ததில் கோவையில் இருந்து சிறிய பொட்டலங்களில் கஞ்சாவை அடைத்து அனுப்பி வைப்பது தெரியவந்தது.
எனவே கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் பல இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று குன்னூர் எடப்பள்ளி அருகே பெட்டட்டி சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வெலிங்டன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக 8 பேர் நின்றிருந்தனர்.
உடனே போலீசார் அவர்கள் 8 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கேட்டில் பவுண்ட் பகுதியை சேர்ந்த ஜெரால்ட் (வயது 32), ஜெப்ரின் (21), சேலக்கரையை சேர்ந்த ரகு (30), கரடிபள்ளம் பகுதியை சேர்ந்த பிரதீப் (20), பழத்தோட்டத்தை சேர்ந்த சிவா (49), கோவை ரத்தினபுரியை சேர்ந்த சிவகுமார் (28), கவுதம் (26), லட்சுமிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (25) என்பது தெரியவந்தது.
மேலும் கோவையை சேர்ந்த சிவக்குமார் உள்பட 3 பேர் கஞ்சாவை குன்னூரை சேர்ந்த நபர்களிடம் கொடுத்து அதை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. இதற்காக 37 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை 6 மாதங்கள் மழைக்காலமாக உள்ளது. இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இதனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும், முடிவடையும் காலத்திலும் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கடந்த மே மாத இறுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அத்துன் பருவ மழைக்காலம் நிறைவு பெற உள்ளது. இதையொட்டி புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.
இதை தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு புலிகள் காப்பக அரங்கில் வனத்துறையினருக்கு பயிற்சி நேற்று நடந்தது. வனச்சரகர்கள் தயானந்த், சிவக்குமார், ராஜேந்திரன், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முகாமுக்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமை தாங்கி வனத்துறையினருக்கு பயிற்சி அளித்தார். பின்னர் தெப்பக்காடு திறந்தவெளி மைதானத்தில் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்பட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய காலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 6 நாட்கள் நடக்கிறது. இதற்காக 37 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஏராளமான வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள் என்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.321 கோடியில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
ஊட்டி:
கொரோனா பரவல் தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறார்.
பின்னர் அவர் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் காலை 11 மணியளவில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்துகிறார். தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியம், நகர்ப்புற ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் போன்ற துறைகள் சார்பில் ரூ.189.35 கோடியில் 67 முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதில் குன்னூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கேத்தி பிரகாசபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட 172 குடியிருப்புகள், நவீன வசதிகள் ஏற்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்டவற்றையும் அவர் திறந்து வைக்கிறார்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை போன்ற துறைகள் சார்பில் ரூ.131.57 கோடியில் புதிதாக 123 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறார். ஆய்வு கூட்டம் நடைபெறும் தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மாளிகை வளாகம், ஆய்வு கூட்டம் நடைபெறும் அரங்கு, சமையல் கூடம், தங்கும் அறைகள், வரவேற்பு அறை உள்ளிட்ட இடங்களில் நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அரங்கில் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கைகள் வரிசையாக போடப்பட்டு உள்ளது. குப்பைகள், புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அதுபோன்று கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலமும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே முதல்- அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா ஊட்டிக்கு வந்தார். பின்னர் அவர் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் முதல்-அமைச்சர் வந்து செல்லும் சாலைகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டிக்கு வருவதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் கேரளா, கர்நாடகா மாநிலங்களை ஒட்டி உள்ள கக்கநல்லா, நாடுகாணி, எருமாடு, பாட்டவயல் மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப் படுகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் தங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி நீலகிரி மாவட்ட போலீசார் 1,200 பேர், வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசார் 800 பேர் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.