search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனத்துறையினருக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    வனத்துறையினருக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

    முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. இதற்காக 37 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை 6 மாதங்கள் மழைக்காலமாக உள்ளது. இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    இதனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும், முடிவடையும் காலத்திலும் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கடந்த மே மாத இறுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அத்துன் பருவ மழைக்காலம் நிறைவு பெற உள்ளது. இதையொட்டி புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.

    இதை தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு புலிகள் காப்பக அரங்கில் வனத்துறையினருக்கு பயிற்சி நேற்று நடந்தது. வனச்சரகர்கள் தயானந்த், சிவக்குமார், ராஜேந்திரன், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முகாமுக்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமை தாங்கி வனத்துறையினருக்கு பயிற்சி அளித்தார். பின்னர் தெப்பக்காடு திறந்தவெளி மைதானத்தில் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்பட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய காலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 6 நாட்கள் நடக்கிறது. இதற்காக 37 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஏராளமான வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள் என்றனர்.
    Next Story
    ×