என் மலர்
நீலகிரி
- நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன.
- தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நஞ்சநாடு மற்றும் இத்தலாா் ஆகிய கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. இத் தேயிலைத் தொழிற்சாலைகளில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினர்களாக இருந்து தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனா்.
தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்து தரமான தேயிலைத் தூள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வின்போது அலுவலா்களுக்கு அமைச்சா் ராமசந்திரன் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநரும், இண்ட்கோசா்வ் முதன்மை செயல் அலுவலருமான மோனிகா ராணா, ஊட்டி வட்டாட்சியா் ராஜசேகா், ஊட்டி ஊராட்சி ஒன்றியதலைவர் மாயன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
- ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பள்ளிப்பாடி பகுதியை சேர்ந்தவர் தாரணி (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கூடலூருக்கு வந்த தாரணி அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கி கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு ஆசாமி பறித்து விட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து மாணவி கூடலூர் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் திருடிய கீழ்நாடுகாணியை சேர்ந்த உகேந்திரன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது
- வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
- ஒரே நாள் இரவில் காட்டு யானை சேதப்படுத்தியதால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த இளையராஜா என்பவரின் கடையை அடித்து உடைத்தது.
தொடர்ந்து மணிகண்டன், சுலைக்கா, பெரியசாமி, வளர்மதி, சிவன் கருப்பன், முத்துமாரி, ஒவேலி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர்களின் வீடுகளையும் இடித்து சேதப்படுத்தியது.ஒரே நாள் இரவில் 7 வீடுகளையும், ஒரு கடையையும் காட்டு யானை சேதப்படுத்தியதால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்கவும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில்இருந்து விஜய், கிரி என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வா ழவயல் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கும்கி யானைகள் மூலம் குடியிருப்பு பகுதி மற்றும் வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுதவிர 25 வனத்துறை ஊழியர்களும், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்து றையினர் கூறுகையில், இந்த பகுதியில் சுற்றி திரியும் யானைகளை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வனத்துறை ஊழி யர்களும் கண்காணித்து வருகின்றனர்.
- மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், தேவாலா, கரியசோலை, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் பலத்த மழை பெய்தது.
சேரங்கோடு அருகே காப்பிகாடு பாரதியார் நகரில் பார்வதி என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நடந்தது.
- நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:
தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்துக்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளா் ஈஸ்வரன், குமாா், பரமேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமன், விவசாய அணி செயலாளா் சௌந்தரபாண்டியன் மற்றும் சபீதா போஜன், பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது, மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா்.
- செஸ் ஒலிம்பியாட்டில் 188 நாடுகள் பங்கேற்பதை குறிக்கும் வகையில் நடைபெற்றது
- மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
ஊட்டி:
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.31 லட்சம் செலவில் ஊட்டி அருகே உள்ள மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் கூறியதாவது:-
இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சா்வதேச அளவில் 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, தோட்டக்கலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.
அதேபோல நீலகிரி மாவட்ட கலெக்டர் வருகிற 25-ந் தேதி கோவை மாவட்டத்துக்கு சென்று சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு டாா்ச் பெற்று வரவுள்ளாா். அதனை தொடா்ந்து, 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் டாா்ச் ரிலே விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி 188 நாடுகள் பங்கேற்பதை முன்னிட்டு மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டி விளையாடுவதற்கு செஸ் போா்டு மற்றும் காய்களை வழங்கினாா்.இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், சிவகுமாா், நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்
- செஸ் ஒலிம்பியாட்டில் 188 நாடுகள் பங்கேற்பதை குறிக்கும் வகையில் நடைபெற்றது
- மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
ஊட்டி:
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.31 லட்சம் செலவில் ஊட்டி அருகே உள்ள மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் கூறியதாவது:-
இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சா்வதேச அளவில் 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, தோட்டக்கலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.
அதேபோல நீலகிரி மாவட்ட கலெக்டர் வருகிற 25-ந் தேதி கோவை மாவட்டத்துக்கு சென்று சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு டாா்ச் பெற்று வரவுள்ளாா். அதனை தொடா்ந்து, 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் டாா்ச் ரிலே விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி 188 நாடுகள் பங்கேற்பதை முன்னிட்டு மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டி விளையாடுவதற்கு செஸ் போா்டு மற்றும் காய்களை வழங்கினாா்.இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், சிவகுமாா், நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
- ஊட்டி, குன்னூா் மற்றும் கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் மூடுபனியும் நிலவுகிறது.
- பல தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு தொழிலாளா்கள் வரவில்லை. இதனால் தேயிலை தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கூடலூர், பந்தலூர், தேவாலா, ஊட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுந்தன. நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
தற்போது கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது மட்டும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஊட்டி, குன்னூா் மற்றும் கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் மூடுபனியும் நிலவுகிறது.
இதன் காரணமாக பல தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு தொழிலாளா்கள் வரவில்லை. இதனால் தேயிலை தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு கூட மக்கள் வெளியில் வருவதில் சிரமம் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.
தொடர்ந்து சாரல் மழை மற்றும் மூடுபனி காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குளிரில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் தீயை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
- ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது.
- பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள்.
ஊட்டி:
பந்தலூர் அருகே ஏலமன்னாவில் இருந்து ேமங்கோரேஞ்ச் வழியாக பந்தலூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோக்கள் சென்று வருகின்றன.
ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் சாலை மீண்டும் பழுதடைய தொடங்கியது. மேலும் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சென்றால், சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அவசர சிகிக்சைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. பழுதடைந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் சாலையில் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலை பழுதடைந்து உள்ளதால், ஏலமன்னா அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு அரிசி, காய்கறிகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் சுமந்தபடி கொண்டு செல்கின்றனர்.
பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் காட்டு யானைகள் விரட்டும் போது, சிலர் தவறி விழுந்து காயமடைகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சாலை அடித்து செல்லப்பட்டு, கால்வாய் போல் காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
- வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
ஊட்டி:
கூடலூர் தாலுகா தேவாலா அருகே வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் 2 காட்டு யானைகள் புகுந்தது.
தொடர்ந்து இளையராஜா என்பவரது கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து மணிகண்டன், சுலைக்கா, பெரியசாமி, வளர்மதி, சிவன் கருப்பன், முத்துமாரி ஆகியோரது வீடுகளை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தின. ஒரே நாள் இரவில் காட்டு யானைகள் 6 வீடுகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதை கண்டித்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.
தகவல் அறிந்த கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டு வந்தது. மேலும் இவரது வீடு தனியாக உள்ளதால் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக அவர் இரவில் உறவினர்கள் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி வந்தார்.நேற்று காலை தனது வீட்டுக்கு வந்தபோது காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.
கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தாக்குதலால் நிம்மதியை இழந்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியுடன் கூறினர். ஒரே நாளில் 7 வீடுகளை காட்டு யானைகள் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
- லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மண்சரிவும் ஏற்பட்டது.
ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீடுகள் சேதம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக மழை சற்று ஒய்ந்து காணப்படுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீரும் தேங்கியது.
இன்று காலை ஊட்டி அடுத்த லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இருந்து குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களில் மொத்தம் 11,151 பேர் குரூப்-4 தேர்வில் பங்கேற்க உள்ளனர். 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை வட்டாட்சியர் நிலையில் மொத்தம் 21 மொபைல் யூனிட் உட்பட 40 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தேர்வுக்கு செல்வதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் காலை 7 மணியில் இருந்தும், பந்தலூர் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணியில் இருந்தும் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பே தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்கள், தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பார்வையற்ற தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






