search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர், கோத்தகிரியில் கடும் பனிமூட்டம்- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    குன்னூரில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற காட்சி.


    குன்னூர், கோத்தகிரியில் கடும் பனிமூட்டம்- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • ஊட்டி, குன்னூா் மற்றும் கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் மூடுபனியும் நிலவுகிறது.
    • பல தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு தொழிலாளா்கள் வரவில்லை. இதனால் தேயிலை தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கூடலூர், பந்தலூர், தேவாலா, ஊட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுந்தன. நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.

    தற்போது கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது மட்டும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், ஊட்டி, குன்னூா் மற்றும் கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் மூடுபனியும் நிலவுகிறது.

    இதன் காரணமாக பல தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு தொழிலாளா்கள் வரவில்லை. இதனால் தேயிலை தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு கூட மக்கள் வெளியில் வருவதில் சிரமம் ஏற்பட்டது.

    வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.

    தொடர்ந்து சாரல் மழை மற்றும் மூடுபனி காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குளிரில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் தீயை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×