search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுந்தேயிலை கொள்முதல்-கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
    X

    பசுந்தேயிலை கொள்முதல்-கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு

    • நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன.
    • தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நஞ்சநாடு மற்றும் இத்தலாா் ஆகிய கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

    நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. இத் தேயிலைத் தொழிற்சாலைகளில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினர்களாக இருந்து தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனா்.

    தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்து தரமான தேயிலைத் தூள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வின்போது அலுவலா்களுக்கு அமைச்சா் ராமசந்திரன் அறிவுறுத்தினாா்.

    இந்த ஆய்வின்போது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநரும், இண்ட்கோசா்வ் முதன்மை செயல் அலுவலருமான மோனிகா ராணா, ஊட்டி வட்டாட்சியா் ராஜசேகா், ஊட்டி ஊராட்சி ஒன்றியதலைவர் மாயன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    Next Story
    ×