என் மலர்
நீலகிரி
- கலெக்டர் அம்ரித்தின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
- குன்னூர், கோத்தகிரி என மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அம்ரித்தின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீலகிரியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இருந்தது. இதையடுத்து கலெக்டர் சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து, கூடலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். வாகன ஓட்டிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் ஊட்டி நகரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் காபி ஹவுஸ், கல்லட்டி, சேரிங்கிராஸ், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் ஊட்டி நகர் பகுதியில் சுற்றி திரிந்த வெளியூர்களில் இருந்து வந்த நபர்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று விசாரணை நடத்தினர்.
இதேபோல் ஓட்டல்கள், தங்கும் அறைகளில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதேபோல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம் , ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலியானது
- வனத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்
ஊட்டி :
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தடா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்கா ராம் போஸ்லே, உதவி வன அலுவலர் சரவணன் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பி வைக்கப்பட்ட இடம் மற்றும் மர்ம நபர்களை தேடும் பணி முடக்கி விடுபட்டு உள்ளது. இந்தநிலையில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தவும் வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி இன்று (நேற்று) சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பொதுவாக விவசாய நிலங்களில், காட்டுப்பன்றி, முயல் உட்பட விலங்குகள், பயிரை நாசப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு வேலிகளை அமைத்து உள்ளனர். மேலும் வேட்டைக்காகவும் சுருக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரோ வைத்த சுருக்கில், சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கியுள்ளது. விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.
இந்த நிலையில் சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் ஒன்று இறந்த நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இறந்த சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலியானது
- வனத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தடா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்கா ராம் போஸ்லே, உதவி வன அலுவலர் சரவணன் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பி வைக்கப்பட்ட இடம் மற்றும் மர்ம நபர்களை தேடும் பணி முடக்கி விடுபட்டு உள்ளது. இந்தநிலையில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தவும் வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி இன்று (நேற்று) சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பொதுவாக விவசாய நிலங்களில், காட்டுப்பன்றி, முயல் உட்பட விலங்குகள், பயிரை நாசப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு வேலிகளை அமைத்து உள்ளனர். மேலும் வேட்டைக்காகவும் சுருக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரோ வைத்த சுருக்கில், சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கியுள்ளது. விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.
இந்த நிலையில் சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் ஒன்று இறந்த நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இறந்த சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- ஓவேலி பேரூராட்சியில் சுற்றுலாபயணிகளை ஈர்க்க நடவடிக்கை
- செல்பி மையம் அமைக்கப்பட்டது
ஊட்டி:
ஓவேலி பேரூராட்சி சாா்பில் சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தில் குடிநீா் ஆதராங்களும், காந்தி நகா் பகுதியில் குப்பை கொட்டும் இடம் சுத்தம் செய்யப்பட்டு செல்பி எடுக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு செயல் அலுவலா் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன் மற்றும் உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா். சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனா்.
- 2-வது சீசனுக்காக தயாராகி வருகிறது குன்னூர் சிம்ஸ் பூங்கா.
- சீசனுக்காக மலர் நாற்றுகள் நடப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இரண்டாம் சீசன் நடைபெறும். குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி தொடங்கிவைத்தாா்.
இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடப்பட உள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மலா் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.
இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
- மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது.
- திரளான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்
ஊட்டி:
மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் கே.ஆர். அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெயசீலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளா் கப்பச்சி வினோத் பேசியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னா் சொத்து வரி, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக விலை உயா்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் வேதனையடைந்து வருகின்றனா். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க முயற்சித்து வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் சாா்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து இலவச மின் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டிராஜி, ஒசிஎஸ் தலைவர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுனர்அணி நகர செயலாளரும், நொண்டிமேடு கிளை செயலாருமான கார்த்திக், கிளை செயலாளர் பிரபுதுர்கா, நகரமன்ற உறுப்பினர்கள் லயோலோ குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்தது முதலே அந்த கிராமங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
- திரவுபதி முர்மு நிச்சயம் எங்கள் தேவைகளை தீர்த்து வைப்பார் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.
அரவேணு:
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுடன் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். நேற்று அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
திரவுபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மலை மாவட்டமான நீலகிரியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே கறிகியூர், மெட்டுக்கள், பாவியூர், அரக்கோடு தாளமுக்கை என 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின இருளர் கிராமங்கள் உள்ளன.
திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்தது முதலே அந்த கிராமங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அவர்கள் கிராமங்களில் ஊர்வலமாகச் சென்று பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திரவுபதி முர்மு பதவியேற்பை முன்னிட்டு நேற்றும் பழங்குடியின மக்கள் முக்கிய இடங்களில் கூடி பாரம்பரிய இசையான அரக்கோன் இசைத்து நடனமாடி மகிழ்ந்தனர். திரவுபதி முர்முவை முன்னுதாரணமாக கொண்டு பழங்குடியினர் அனைவரும் வாழ்வில் முன்னேற்றப்பாதைக்கு செல்ல வேண்டும் என அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தங்களின் நிறைகுறைகளை அறிந்த ஒரு தலைவராக திரவுபதி முர்மு விளங்குகிறார், எனவே நிச்சயம் அவர் எங்கள் தேவைகளை தீர்த்து வைப்பார் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.
- பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பழங்குடியின மக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கோழிக்கரை கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தீபக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பழங்குடியின மக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, வனப்பகுதி மற்றும் ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்தினர். முகாமில் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.
- சாலைகளில் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாகன ஒட்டிகள் அதிவேகமாக சென்றது தெரியவந்தது.
ஊட்டி
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும், அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் போலீசார் ஊட்டியில் உள்ள முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தினர்.
ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் நவீன கருவி மூலம் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
இதில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாகன ஒட்டிகள் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. தொடர்ந்து 200 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மலைப்பாதையில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஜக்கலோடை கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும்,
அரவேனு
கோத்தகிரி அருகே ஜக்கலோடை கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் பெள்ளி, ஊர் நிர்வாகி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும், விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களா காட்டேஜ் கட்டுவதை தடுக்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட தேயிலை விவசாயிகள் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்,
கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானது இல்லை. குடும்ப செலவுக்கு விவசாயிகள் திணறி வருகின்றனர். பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும், அரசு தேயிலை ஏல மையத்தில் குறைந்த பட்சம் 150 -க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டுமென வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும். விவசாய பயிர்களை அழித்து வரும் காட்டு பன்றிகளை சுட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
அச்சுதன் வரவேற்றார். சந்திரன் நன்றி கூறினார்.
- நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா்.
- குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.
ஊட்டி:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.
ஊட்டியில் சி.எஸ்.ஐ.சி. எம்.எம். உயா்நிலைப் பள்ளி, பிரிக்ஸ் பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, யுனிக் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வினை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், ஊட்டி வட்டத்தில் உள்ள 15 மையங்களில் 4,032 போ், குன்னூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,054 போ், கூடலூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,151 போ், கோத்தகிரி வட்டத்தில் உள்ள 5 மையங்களில் 1,370 போ்,
குந்தா வட்டத்தில் உள்ள 2 மையங்களில் 319 போ், பந்தலூா் வட்டத்தில் உள்ள 4 மையங்களில் 1,225 போ் என 40 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 8,763 போ் தோ்வு எழுதினா். இது 78.58 சதவீதம் ஆகும். 2,388 போ் தோ்வு எழுதவில்லை.
இத்தோ்வினை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பறக்கும் படை அலுவலா்கள், 6 வட்டங்களில் 6 மேற்பா ா்வை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வுக் கூடங்களை கண்காணிக்க சம்பந்த ப்பட்ட கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றில் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் நிலையில் மொத்தம் 40 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, தோ்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்வையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணி யாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ள வழிமு றைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு தோ்வுகள் நடைபெற்றன.
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் கிருஷ்ணகுமாா் தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது.
- பொதுமக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஊட்டி
கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
தொடர்ந்து மங்குலி, தோட்டமூலா உள்பட 5 இடங்களில் பாலம் உடைந்து விழுந்தது. இதேபோல் கூடலூர் ஆனைசெத்த கொல்லியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள சிமெண்டு பாலத்தின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டது. தற்போது பாலம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இருப்பினும் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இரவில் வெளியூர் பயணிகள் வாகனங்களில் வரும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆற்றுவாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாலத்தின் அடிப்பாகம் வலுவிழந்து வருகிறது. இதனால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதம் நடைபெறும் முன் பாலத்தின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






