search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவு
    X

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவு

    • 2-வது சீசனுக்காக தயாராகி வருகிறது குன்னூர் சிம்ஸ் பூங்கா.
    • சீசனுக்காக மலர் நாற்றுகள் நடப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இரண்டாம் சீசன் நடைபெறும். குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி தொடங்கிவைத்தாா்.

    இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடப்பட உள்ளன.

    அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மலா் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.

    இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×