search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கோத்தகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • ஜக்கலோடை கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும்,

    அரவேனு

    கோத்தகிரி அருகே ஜக்கலோடை கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் பெள்ளி, ஊர் நிர்வாகி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும், விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களா காட்டேஜ் கட்டுவதை தடுக்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட தேயிலை விவசாயிகள் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்,

    கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானது இல்லை. குடும்ப செலவுக்கு விவசாயிகள் திணறி வருகின்றனர். பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும், அரசு தேயிலை ஏல மையத்தில் குறைந்த பட்சம் 150 -க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டுமென வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும். விவசாய பயிர்களை அழித்து வரும் காட்டு பன்றிகளை சுட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    அச்சுதன் வரவேற்றார். சந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×