என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    20-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 21-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மன் சிங்க வாகனம், காமதேனு வாகனம், அன்னபட்சி மற்றும் காளை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    28-ந் தேதி வடிசோறு மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சியும் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை திருத்தேரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத் தலைவர் முருகவேல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை தீமிதி விழாவும், நாளை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் காலை கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.

    2 மற்றும் 3-ந் தேதிகளில் மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கான விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் வாதித்தனர்.

    பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 485 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசு உயர்த்தி 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதேபோல முட்டை கோழி பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 96 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
    • அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    ராசிபுரம்:

    நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஒரு பெண் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். காரை ராமு என்பவர் ஓட்டி சென்றதாக தெரிகிறது.

    சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த 55 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காரை ஓட்டிச் சென்ற ராமு உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த வர்களா என்று தெரிய வில்லை. விபத்தில் இறந்த பெண் உடல் பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி யில் வைக்கப்பட்டுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள முடி யவில்லை. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். வெண்ணந்தூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • ராஜா வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நல்லாட்சி (வயது 74), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன நல்லாட்சியை அவரது மகன்கள் செந்தில்குமார், பார்த்திபன் ஆகியோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பரமத்திவேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள வாஞ்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள ராஜா வாய்க்காலில் அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜா வாய்க்காலில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நல்லாட்சி என்பது தெரிய வந்தது.

    கூலி வேலைக்கு சென்ற நல்லாட்சி, வீட்டிற்கு திரும்பு கையில் ராஜா வாய்க்கால் கரையில் நடந்து சென்றார். அப்போது வாய்க்கால் கரையோரத்தில் கீழே விழுந்து கிடந்த தேங்காயை எடுக்க முயன்ற போது, திடீ ரென எதிர்பாராத விதமாக மயங்கி ராஜா வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் மேலே வரமுடியாமல் தத்தளித்த நல்லாட்சி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோ தனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த 4 கடைகளுமே அரசு அனுமதி பெற்ற பார் என பிளக்ஸ் பேனர் வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை ஒட்டி பார் செயல்பட்டு வந்தது. இந்த 4 கடைகளுமே அரசு அனுமதி பெற்ற பார் என பிளக்ஸ் பேனர் வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த கடைகளில் அதிகாலை முதலே மது விற்பனை நடைபெற்றது.

    இந்த நிலையில் டாஸ்மாக் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் 2 கடைகள் மட்டுமே, அரசு அனுமதி பெற்றுள்ளது என தெரிய வந்தது. மேலும் 2 கடைகள் அனுமதி பெறாமல், அனுமதி பெற்ற கடையை போல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அனுமதி பெறாமல் இயங்கிய பார்களை உடனடியாக மூட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதிகாரிகள் ஆய்வை அடுத்து அனுமதி பெறாமல், இயங்கிய வந்த 2 பார்களும் மூடப்பட்டது.மேலும் உரிய லைசென்ஸ் பெறாமல் பார் நடத்தினால் பாரில் பணி புரிபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • பட்டதாரி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.- க்கு மாற்றக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பட்டதாரி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.- க்கு மாற்றக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைக்கு பயன்படக்கூடிய டிராக்டர்களுக்கும், பள்ளி வாகனத்திற்கு தீ வைப்பு, வீடுகளுக்கு பெட்ரோல் மற்றும் மண்ணெண்னை குண்டு வீசியது, உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

    கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 4 பேர் மீது மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஆலைக் கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது.

    இப்பகுதியில் நடந்துவரும் தொடர் அசம்பாவித சம்பவங்கள் காரணமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிர இரவு நேர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இளம்பெண் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    4 பேரிடம் தீவிர விசாரணை

    இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை பிடித்து இரவோடு இரவாக நாமக்கல்லில் உள்ள விசாரணை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
    • நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது.

    நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 26-ந் தேதி காலை கபிலர்மலைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 62), பால் வியாபாரி.

    இவர் கடந்த 26-ந் தேதி காலை கபிலர்மலைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கபிலர்மலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணை அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று தலைமறைவான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருநங்கைகள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஞாயிற்றுக் கிழமை மற்றும் சிறப்பு விழா நாட்களில் தேவலாயம் முன்பு தற்காலிக அங்காடி அமைத்து விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருந்தனர்.
    • முதல் விற்பனையை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பெற்றுக்கொண்டார்.

    திருச்செங்கோடு:

    திருநங்கைகள் கடைகடையாக சென்று காசு வாங்கி பிழைப்பு நடத்தாமல் தங்களின் சுய முயற்சியால் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய திருநங்கைகள் திருப்பணி இயக்கம், திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் சார்பில் உதவி செய்து ஊக்கம் அளித்த தோடு அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஞாயிற்றுக் கிழமை மற்றும் சிறப்பு விழா நாட்களில் தேவலாயம் முன்பு தற்கா லிக அங்காடி அமைத்து விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருந்தனர்.

    அதன்படி சங்ககிரி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பு அமைக்கப் பட்டிருந்த விற்பனை நிலையத்தை ஆலய நிர்வாக கமிட்டி செயலாளர் பீட்டர் செல்வ ராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    முதல் விற்பனையை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தேவாலய பாதிரியார் ஜஸ்டின், திருநங்கைகள் நலஅமைப்பு நிர்வாகி அருணா நாயக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.
    • இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சிவா தியேட்டர் கார்னர் பகுதிகளில், சுல்தான்பேட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.

    இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    ஸ்பீக்கர் அதிக சத்தத்துடன் ஒலிப்பதால் அப்பகுதி மக்களும், சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் வகையில் சாலையிலேயே காலை முதல் மாலை வரை வண்டிகளை நிறுத்தி வைப்பதால் விபத்தும் ஏற்படுகின்றது.

    எனவே மினி ஆட்டோவில் உள்ள அதிக சத்தத்துடன் ஒலிக்கும் ஸ்பீக்கரை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆட்டோ வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட குரலை திரும்பத் திரும்ப ஒலிப்பதால் இதை கேட்கும் எங்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு சத்தத்துடன் ஸ்பீக்கரில் ஒளிபரப்புகின்றனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழி காட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள எலக்ட்ரா னிக் வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவல கத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப் பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    இங்கு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்-2 வகை வாக்குபதிவு எந்திரங்கள் 1366, கட்டுப்பாட்டு கருவிகள் 621 மற்றும் எம்-3 வகையிலான பழுதடைந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் 8 மற்றும் வாக்கா ளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி கள் 3 என மொத்தம் 1,998 வாக்குபதிவு எந்திரங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை யில் திறக்கப்பட்டு, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் சரிபார்க்கப்பட்டது.

    பின்னர் இந்த எந்தி ரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரா னிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், நாமக்கல் ஆர்.டி.ஓ (பொறுப்பு) சுகந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது.
    • இந்த மீன் கடைகளுக்கு தேவை யான மீன்கள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது. இந்த மீன் கடைகளுக்கு தேவை யான மீன்கள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த கண்டெய்னர் லாரிகளை, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பாலத்தில் பல மணி நேரம் நிறுத்தி விடுகின்றனர். அப்போது கண்டெய்னர் லாரியின் உள்ளே இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் பரவலாக தேங்கி விடுகிறது.

    மேலும் கண்டெய்னர் லாரியிலிருந்து இறக்கப்பட்ட மீன் பெட்டியும் வரிசையாக அடுக்கி வைக்கப்படுவ தாலும், துர்நாற்றம் வீசுகிறது. அந்த சமயத்தில் வாகனத்தில் செல்வோர்கள் மிகவும் அவதிப் படுகின்ற னர். மேலும் போக்கு வரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது.

    இது குறித்து முன்னாள் கவுன்சிலர் செல்வம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நகராட்சி சேர்மன், துணை சேர்மனிடம் புகார் தெரிவித்தார்.

    ×