search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை, முட்டை கோழி, கறிக்கோழி விலை உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை, முட்டை கோழி, கறிக்கோழி விலை உயர்வு

    • ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கான விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் வாதித்தனர்.

    பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 485 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசு உயர்த்தி 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதேபோல முட்டை கோழி பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 96 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×