search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதியில் ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் காய்கறிகள் விற்பனை
    X

    பரமத்திவேலூர் பகுதியில் ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் காய்கறிகள் விற்பனை

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.
    • இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சிவா தியேட்டர் கார்னர் பகுதிகளில், சுல்தான்பேட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.

    இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    ஸ்பீக்கர் அதிக சத்தத்துடன் ஒலிப்பதால் அப்பகுதி மக்களும், சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் வகையில் சாலையிலேயே காலை முதல் மாலை வரை வண்டிகளை நிறுத்தி வைப்பதால் விபத்தும் ஏற்படுகின்றது.

    எனவே மினி ஆட்டோவில் உள்ள அதிக சத்தத்துடன் ஒலிக்கும் ஸ்பீக்கரை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆட்டோ வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட குரலை திரும்பத் திரும்ப ஒலிப்பதால் இதை கேட்கும் எங்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு சத்தத்துடன் ஸ்பீக்கரில் ஒளிபரப்புகின்றனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×