என் மலர்
நாமக்கல்
- திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது.
- திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் கம்பன் கழகத்தின் துணைத் தலைவருமான பால தண்டாயுதபாணி வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சஎம்.எல்.ஏ. ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்ட னர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக் கரசு, திருச்செங்கோடு வித்ய விகாஸ் கல்வி நிறுவனங்
களின் தாளாளர் சிங்கார வேல் வாழ்த்தி பேசினார்
ராமபிரானின் இதயத்தில் பெரிதும் இடம் பிடித்தவர்கள் உடன் பிறந்தோர், உடன் சேர்ந்தோர் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக ராமச்சந்திரன் பேசினார். உடன் பிறந்தோரே என்ற அணியில் பெருந்துறை ரவிக்குமார், திருப்பூர் தெய்வநாயகி பேசினார்கள். உடன் சேர்ந்தோரே என்ற அணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா ஜெயச்சந்திரன், ராஜபாளையம் உமா சங்கர் பேசினர்.
திருச்செங்கோடு கம்பன் கழக செயலாளர் செங்குட்டுவேல் நன்றி கூறினார்.
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
- தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களை யும் ஒற்றைசாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் உமா பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 165.78மி.மீ.மழை பெறப்பட்டுள்ளது.மே மாதம் முடிய இயல்பு மழையளவை விட 1.58 மி.மீ. அதிகமாக மழை பெறப் பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை நெல் 16.5 எக்டர், சிறுதானியங்கள் 221.52 எக்டர், பயறு வகைகள் 2 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 26.90 எக்டர், பருத்தி 704 எக்டர் மற்றும் கரும்பு 53 எக்டர் என மொத்தம் 1021.70 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் மரவள்ளி 6 எக்டர் மற்றும் வாழை 2 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நெகிழி பைகள் உற்பத்தி செய்யும் இடங்களைக் கண்டறிந்து உற்பத்தி மற்றும் மொத்த விற்பனையை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 23 கண்மாய்களில் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து விவசாயி கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்களை அந்தந்த வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களை யும் ஒற்றைசாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த வலைதளத்தில் 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன் அடைய நாமக்கல் மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பட்டா நகல், ஸ்மார்ட் கார்டு நகல், விவசாயிகளின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் கைப்பேசி எண் முதலிய ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலு வலர் மணிமேகலை, மோக னூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மீராபாய், வேளாண்மை இணை இயக்குநர் துரை சாமி, கூட்டூறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறி யாளர் சிவக்குமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், வேளாண்மை துணை இயக்குநர் ராஜகோபால், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ந டராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
- எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, எட்டுப்பட்டி கிராமம், குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
விழாவையொட்டி, நேற்று காவிரிக் கரையில் எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.
பின்னர் புனிதநீர் நிரம்பிய சுமார் 700 தீர்த்தக் குடங்களையும் மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக குன்னத்தூர் மகா மாரியம்மன் சன்னதிக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர்.
முன்னதாக குடமுழுக்கு விழாவையொட்டி கணபதி ஹோமத்துடன் பூஜை நடந்தது.
- பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பூபாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர்:
திருச்சி மாவட்டம், துறையூரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கி காயப்படுத்திய தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களை கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்கக்கோரி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பூபாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள் தாக்கப்பட்டு வருவதை தடுக்க கோரியும், இனிவரும் காலங்களில் வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முத்துசெழியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறது.
- இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.
நாமக்கல்:
இலங்கையில் கடந்த ஒரு ஆண்டாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பண வீக்கத்தால் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறது.
இதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள 2 கோழிப்பண்ணைகளில் இருந்து முதற்கட்டமாக 2 கோடி முட்டைகள் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு, அதில் 1 கோடி முட்டைகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள கால்நடை உற்பத்தி துறை மற்றும் எஸ்.டி.சி. அதிகாரிகள் தமிழகம் வந்தனர்.
நாமக்கல்லுக்கு வந்த அவர்கள் மொத்தம் 5 கோழிப்பண்ணைகளை நேரில் பார்வையிட்டு, முட்டையின் தரத்தை ஆய்வு செய்தனர். பின்னர் முட்டைகள் இறக்குமதி செய்ய பண்ணையாளர்களுக்கு அனுமதி அளித்தனர்.
இந்த 5 கோழிப்பண்ணைகளில் இருந்தும் தினசரி 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்ய உள்ளதாக, இலங்கை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேசன் (எஸ்.டி.சி.) சேர்மன் அசின் வலிசுந்தரா தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், இலங்கையில் உள்ள பெரிய பேக்கரிகள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள், சமையல் காண்ட்ராக்டர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு, ஒரு முட்டை விலை ரூ.35 (இலங்கை எஸ்.எல்.ஆர்.) விலைக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.
- அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.
நாளை முதல் கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
- சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன்.
- வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
நாமக்கல்:
கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அப்பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது சேந்தமங்கலம் கோர்ட்டில் நடந்து வரு கிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பி யும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாதை யனுக்கு கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.
- சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது.
- குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது. இதில் 3-4 வயது உள்ள குழந்தைகள் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் மதியம் வரை குழந்தை கள் மையத்தில் உள்ளனர். மதிய உணவு அங்கு இலவச மாக வழங்கப்படுகிறது.
அதற்கு பிறகு குழந்தை களை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசி ரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது. தற்பொ ழுது கோடை காலத்தை முன்னிட்டு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பதை அரசு ஒத்திவைத்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படு கிறது. இந்த நிலையில் குழந்தைகள் மையத்தை மட்டும் முன்னதாகவே திறந்து உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்க ளுக்கு அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது. கோடை வெயில் இன்னமும் சுட்டெரிப்பதால் குழந்தை கள் வாடி வதங்கி மையத் துக்கு செல்வதை பார்த்து பெற்றோர் குமுறுகின்றனர்.
இது குறித்து பரமத்தி வேலூர் குழந்தைகள் மைய ஆசிரியரிடம் கேட்டபோது:-
கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 25-ந் தேதி குழந்தைகள் மையம் திறக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட னர். அதற்குப் பிறகு மாற்று உத்தரவு எதுவும் வர வில்லை. அதனால் நாங்கள் வழக்கமாக கடந்த 25-ந் தேதி முதல் குழந்தைகள் மையம் திறந்து செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து குழந்தை களின் பெற்றோர்கள் கூறியதாவது:-
சிறு வயது குழந்தைகளை எல்.கே.ஜி., வகுப்புகள் போல் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கிறோம். கோடைகால வெப்பத்தை தாங்க முடியாமல் இருக்கும்போது 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு தேதி மாற்றம் செய்துள்ளனர். ஆனால் குழந்தைகள் மையம் மட்டும் திறப்புக்கு அதிகாரிகள் உத்தரவிட்டது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரும்பாலான குழந்தைகள் மையம் மேற்கூரை சிமெண்ட் அட்டை போட்ட கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. குழந்தைகள் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் உடல் சோர்வு அடைகின்றனர்.
மற்ற வகுப்புகளுக்கு தேதி மாற்றம் செய்தது போல் குழந்தைகள் மையகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு 7-ந் தேதி தொடங்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குமாரபாளையம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜன் என்பவர் காவலாளியாக உள்ளார்.
- கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜன் என்பவர் காவலாளியாக உள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் கோவில் கேட்டை பூட்டி விட்டு, ராஜன் கோவி லினுள் படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது, ராஜனின் செல்போனை காண வில்லை. இதையடுத்து கோவில் முழுவதும் தனது செல்போனை தேடி பார்த் துள்ளார். அப்போது, கோவில் பூட்டு உடைக்கப் பட்டு, கேட் திறந்து கிடந்தது. மேலும் அங்கிருந்த உண்டிய லும் உடைக்கப்பட்டு, அதி லிருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த ராஜன், கோவில் பூசாரியான வேலுமணி மற்றும் கோவில் நிர்வாகிக ளுக்கு தகவல் அளித்தார்.
பின்னர் இதுகுறித்து குமாரபாளையம் போலீ சாருக்கு, கோவில் நிர்வாகி கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபு ணர்களும் வரவழைக்கப் பட்டு கைரேகைகள் சேகரித்தனர். உண்டியலில் சுமார் ரூ. 2 1/2 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகைகள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள குமார பாளையம் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேட்டுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தனமணி (65) என்பவரும், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
- சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து, மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த முத்துசாமி மற்றும் தனமணி மீது மோதினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உலகப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50).
இவரும் இவரது மாமியார் கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தனமணி (65) என்பவரும், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
சித்தளந்தூர்- ஜேடர்பாளையம் சாலையில், உப்புபாளையம் பிரிவு அருகே சாலையின் ஓரமாக மண் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே சாலையில், ஈரோடு அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவர் சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து, மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த முத்துசாமி மற்றும் தனமணி மீது மோதினார்.
இதில் முத்துசாமி, தனமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து, தனமணியை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், முத்துசாமியை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அங்கு முத்துசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து முத்துசாமியின் மனைவி கோமதி (40), நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர், சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவை முன்னிட்டு பரமேஸ்வர ருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பர மேஸ்வரர், மாசாணியம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பால முருகன், காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வ நாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவு ரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லை யம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருககே கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கு அக்கினி நட்சத்திர நிவர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
- மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 286 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தீ விபத்தால் வீடு இழந்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், திடுமலை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு ரெட்கிராஸ் சார்பில், சமையல் பாத்திரங்கள், வேட்டி, சேலை, பாய், போர்வை, கம்பளி, கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.840 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோலும், ரூ.2,780 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும், மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் என 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,620 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






