search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Remedial Camp"

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
    • மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

    பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 286 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, தீ விபத்தால் வீடு இழந்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், திடுமலை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு ரெட்கிராஸ் சார்பில், சமையல் பாத்திரங்கள், வேட்டி, சேலை, பாய், போர்வை, கம்பளி, கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.840 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோலும், ரூ.2,780 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும், மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் என 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,620 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

    பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார்.
    • மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார். இதை யொட்டி இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு எஸ்.பி.கலை யரசன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பில் குடும்பப்பிரச்னை, சொத்துப்பிரச்னை உள்ளிட்டவை குறித்து மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அவற்றைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வில், ஏ.டி.எஸ்.பி.க்கள் கனகேஸ்வரி, ராஜு, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களின் மீது விசாரணை நடத்தி பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கினர்.

    • ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
    • சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்க ளுக்கான குறைதீர் கூட்டம் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்ப கல் 1 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்த மங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபா ளையம் தாலுகா வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப் பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கை களுக்கு தீர்வு காணலாம். மேலும், பொது விநியோ கத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும், பொது மக்கள் அனைவரும், கொரோனா முன்னெச்ச ரிக்கை அறிவு ரைகளை தவறாமல் கடை பிடித்து, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மார்ச் மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 11-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
    • அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    அன்னதானப்பட்டி:

    தமிழகத்தில் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்லப்பாண்டியன், கென்னடி தலைமை தாங்கினர்‌ . இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தையல்நாயகி, ‌சண்முகம், ராஜேந்திரன், சின்னசாமி, இளமுருகன் ஆகியோர் தனித்தனியே புகார் மனுக்கள் பெற்று விசாரித்தனர்.

    24 புகார் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. இது போல மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    ×