பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவை முன்னிட்டு பரமேஸ்வர ருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பர மேஸ்வரர், மாசாணியம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பால முருகன், காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வ நாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவு ரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லை யம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருககே கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கு அக்கினி நட்சத்திர நிவர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com