இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன்.வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
Published on

நாமக்கல்:

கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அப்பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது சேந்தமங்கலம் கோர்ட்டில் நடந்து வரு கிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பி யும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாதை யனுக்கு கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com