search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி திறக்கும் முன்பே குழந்தைகள் மையங்கள் திறப்பு
    X

    பள்ளி திறக்கும் முன்பே குழந்தைகள் மையங்கள் திறப்பு

    • சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது.
    • குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது. இதில் 3-4 வயது உள்ள குழந்தைகள் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் மதியம் வரை குழந்தை கள் மையத்தில் உள்ளனர். மதிய உணவு அங்கு இலவச மாக வழங்கப்படுகிறது.

    அதற்கு பிறகு குழந்தை களை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசி ரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது. தற்பொ ழுது கோடை காலத்தை முன்னிட்டு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பதை அரசு ஒத்திவைத்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படு கிறது. இந்த நிலையில் குழந்தைகள் மையத்தை மட்டும் முன்னதாகவே திறந்து உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்க ளுக்கு அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது. கோடை வெயில் இன்னமும் சுட்டெரிப்பதால் குழந்தை கள் வாடி வதங்கி மையத் துக்கு செல்வதை பார்த்து பெற்றோர் குமுறுகின்றனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் குழந்தைகள் மைய ஆசிரியரிடம் கேட்டபோது:-

    கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 25-ந் தேதி குழந்தைகள் மையம் திறக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட னர். அதற்குப் பிறகு மாற்று உத்தரவு எதுவும் வர வில்லை. அதனால் நாங்கள் வழக்கமாக கடந்த 25-ந் தேதி முதல் குழந்தைகள் மையம் திறந்து செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குழந்தை களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    சிறு வயது குழந்தைகளை எல்.கே.ஜி., வகுப்புகள் போல் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கிறோம். கோடைகால வெப்பத்தை தாங்க முடியாமல் இருக்கும்போது 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு தேதி மாற்றம் செய்துள்ளனர். ஆனால் குழந்தைகள் மையம் மட்டும் திறப்புக்கு அதிகாரிகள் உத்தரவிட்டது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரும்பாலான குழந்தைகள் மையம் மேற்கூரை சிமெண்ட் அட்டை போட்ட கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. குழந்தைகள் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் உடல் சோர்வு அடைகின்றனர்.

    மற்ற வகுப்புகளுக்கு தேதி மாற்றம் செய்தது போல் குழந்தைகள் மையகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு 7-ந் தேதி தொடங்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×