என் மலர்
நாகப்பட்டினம்
- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டி நடைபெற்றது.
- நகராட்சி ஆணையர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் நம்ம ஊரு திருவிழாபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 8 கி.மீமாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆண் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்
வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பெண்கள் கான மாரத்தான் ஒட்ட பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்பு ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்பந்தயத்தை டிஎஸ்பி முருகவேல் துவக்கி வைத்தார். ஒட்டபந்தயதில் 1500-க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் கலந்துகொண்டனர்
நிகழ்ச்சியில்நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில்கோடியக்கரை வணச்சரகர் அயூப் கான் நகராட்சி பொறியாளர் முகமது இப்ரஹீம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள்கலந்து கொண்டனர்வெற்றி பெற்ற வீரர்களுக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி பரிசுகளை வழங்கினர்.
- ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
- புனித நீர் தெளித்து வீதி வழியாக தேர்பவனி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காடம்பாடியில் பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது முன்னதாக ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரி கக்ப்பட்ட சப்பரத்தில் புனித செபஸ்தியார்எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
- சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று அரசு தொடக்கபள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
- மழை காலங்களில் பேரிடர் மீட்பு முகாமாகவும் செயல்பட்டு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வேதாரண்யம்:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தில் வேளானிமுந்தல் கிராமம், முனீஸ்வரன் கோவில் தெரு, லிங்கத்தடி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழில் ஆகும்.
இந்த 3 கிராமங்களிலும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், அவர்கள் படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடம் கூட அப்பகுதியில் இல்லை.
அங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று சந்தானம் தெரு கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கபள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் ஒரு பள்ளி இருந்தால் குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மேலும், மழை காலங்களில் இப்பகுதி வெள்ள காடாக காட்சி அளிக்கும். அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகளோடு நீண்ட தொலைவில் உள்ள அரசு முகாம்களுக்கு தான் செல்ல வேண்டும்.
இதுவே, இப்பகுதியில் பள்ளி இருந்தால் மழை காலங்களில் பேரிடர் மீட்பு முகாமாகவும் செயல்பட்டு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, லிங்கத்தடி தெரு கிராமத்தில் பள்ளி அமைத்தால் 3 கிராமங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அருகாமையில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை.
- பல்வேறு பிரத்தியேக உபகரணங்கள் கொண்டு முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகையில் மாற்றுத்திற னாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டாரவள மையம் சார்பாக 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்தி றனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாம் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். மருத்துவ முகாமில் 6 மருத்துவர்களை கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.
குறிப்பாக கலந்து கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவி தொகை, கல்வி தொகை போன்ற உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை, மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது பல்வேறு பிரத்தியேக உபகரணங்கள் கொண்டு முகாம் நடைபெற்றது.
- வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம்.
- பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள்.
- கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 14 மனுக்களை பெற்றார். அதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்கள்.
காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581) மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் குற்றபதிவேடு கூடம் துணை சூப்பிரண்டு பிலிப் பிராங்கிளின் கேன்னடி. மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
- கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியில் மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அறுகம்புல் சாண விநாயகர் வைப்பது வழக்கம்.
திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் பிடித்து வைத்த பிள்ளையாரை ஆற்றில் கரைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இதன் அடிப்படையில் காணும் பொங்கலை யொட்டி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து உப்பாற்றின் அருகே கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பின், கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர். நிகழ்ச்சிக்கு பல ஊர்களில் இருந்து பெண்கள் வந்து நட்பை பரிமாறி கொண்டனர்.
- இடைத்தரகர்களின் தலை யீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
- விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.
வேதாரண்யம்:
காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் (விவசாய பிரிவு) சுர்ஜித் சங்கர் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளில் சில இடங்களில் அறுவடை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெரும்பா லான கொள்முதல் நிலை யங்களில் அடிப்படை வசதி களான குடிநீர், கழிவறை மற்றும் சாலை வசதி இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்க ளுக்கு போர்கால அடிப்படையில் ஷெட் வசதி செய்து தர வேண்டும், அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் நெல் தூற்றக்கூடிய எந்திரங்கள் வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் மூட்டை தூக்குவதற்கு தொழி லாளர்கள் பற்றாக்குறை இருப்பதை கருத்தில் கொண்டு மூட்டைகளை ஏற்றி இறக்குவதை நவீனப்படுத்த வேண்டும், கொள்முதல் செய்து இங்கு வரும் நெல் மூட்டைகளை காலதாமதம் இன்றி அரவை மில்களுக்கும், வெளி மாவட்டத்திற்கும் விரைந்து அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தாளடி பருவம் நெருங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், விளைவித்த நெல்லை அரசு குறித்த நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கால பைரவருக்கு மஞ்சள், பால், திரவியம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம்.
- வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கால பைரவர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி கால பைரவருக்கு மஞ்சள், பால், திரவியம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
- முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாதாணிக்கோட்டகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது.
இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரையின் பேரில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார், கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணகுமார் , சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை,மலடு நீக்கம், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன, இதில் சிறந்த கால்நடை கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மற்றும் மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.
- விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
இந்திய கட்டுனர் சங்க நாகப்பட்டினம் மையம் சார்பாக வெங்கிடங்கால் செம்பை நதி கிராமத்தில் கிராம மக்களுடன் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய கட்டுணர் சங்க நாகப்பட்டினம் மைய தலைவர் அரிமா ச. மீரா உசேன் தலைமை தாங்கினார்.
கட்டுனர் சங்க பொறுப்பாளர்கள் முனைவர் நவாப்ஜான், முனைவர் காளிதாஸ், சர்புதீன் மரைக்கார் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக ஆடிட்டர் கே.எஸ்குமாரவேல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாகூர் ஏ.ஆர்.நௌஷாத் கலந்து கொண்டனர் விழாவில் ஆடிட்டர் குமாரவேலு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.
விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
- மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால் அந்த பகுதியே குதுகலமானது.
பேராலயத்தில்நடைபெறும்திருப்பலிகளிலும், பழையமாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்களுடனும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
கடற்கரையில் அசாம்பாவிதங்கல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






