என் மலர்
நாகப்பட்டினம்
- 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பம்.
- 439 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்ற முகாமில் ஆர்வத்துடன் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முகாமில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் ராயல் என்ஃபீல்டு, டாட்டா, ஆதித்யாபிர்லா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
நாகை மாவட்டத்தில் 3488 நபர்கள், அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 186 நபர்கள் என 3674 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் 978 நபர்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு, அதில் 439 நபர்களுக்கு உடனடியாக பணியானை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 33 நபர்களுக்கு ரூ.14 லட்சத்து 10 ஆயிரம் நிதி உதவியை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
- நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.
- மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக நாகை செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வு நேரங்களில் சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதிலும், இவர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல், பொதுசுகாதாரத்துறை விழிப்புணர்வு பாடல், நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.
இந்நிலையில், மாவட்டம் சார்பில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நாகை செல்வன் பாடிய பாடல் நாகை மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது. அப்போது சமூக விழிப்புணர்வு பாடல் பாடி வருவதற்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பாராட்டினார்.
- அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு.
- உலக நன்மைக்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு செல்வநாக முத்து மாரியம்மன் கோவிலில் தை வெள்ளியை ஒட்டி உலக ஷேமத்திற்கு அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் கோயிலின் பூஜகர் அம்மன் வேடமடைந்து தீச்சட்டி எடுத்து உலக ஷேமத்திற்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார்.விழா மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
- பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை அவுரி திடலில் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையம், தானம் அறக்கட்டளை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ரகு தலைமை, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தாங்கினார்.
நாகை புதிய பஸ் நிலையம் அவுரி திடலில் தொடங்கிய பேரணியானது நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது.பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தினை கடுமையாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது நாகை, சீர்காழி, காரைக்கால், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.
- கருட பகவான் கோவிலை வலம்வர கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சுப்ரமணியருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் புகழ்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23-ந் தேதி கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
நேற்று லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.
கருட பகவான் கோயிலை வலம் வர ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.
- ஒரு ஆண்டாக அங்கு பள்ளம் அப்படியே உள்ளதால், அடிக்கடி விபத்து நடக்கிறது.
- பலமுறை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோதி கம்புகள் சாய்ந்து உள்ளன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு அருகே மருதூர் மாடிக்கடை பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் நெடுஞ்சாலையின் நடுவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவானது.
இந்த பள்ளத்தை சுற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கம்புகளை நட்டு வேலி போன்று அமைத்து வைத்துள்ளனர்.
ஆனால் பள்ளத்தை சீரமைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அங்கு பள்ளம் அப்படியே உள்ளதால், அடிக்கடி விபத்து நடக்கிறது.
பலமுறை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோதி கம்புகள் சாய்ந்து உள்ளன. இதுபோன்ற விபத்துகளில் சிக்கிய பலருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை பொதுமக்களும், வர்த்தக சங்கத்தினரும் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாதா கோவிலின் உபகோவிலான பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் மைக்கல்ச ம்மனசு, புனித அந்தோனியார், செபஸ்தியார், எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முக்குலத்தோர் கத்தோலிக்க சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
- குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும்.
- சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம் :
நாகப்பட்டினத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரபோஜி தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புத்தூரில் தெய பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்கள் பங்கேற்றனர்.
10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உடன் விவசாயிகள் பேரணியாக அவுரிதிடலில் சென்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றி விவசாயிகள் பயன்படும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும், என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பேரணி அவுரி திடலில் முடிவடைந்தது. அங்கு பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.
- காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளி களுக்கு ரூ.90,89,347/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வளர்ச்சி முகமை, சிறப்பாக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊரக துறைகளில் நற்சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செல்வராஜ் எம்பிஅதிகாரிகள் பிரிதிவிராஜ் பானோத் ம்ருகேந்தர்லால்மாவட்ட வருவாய் அலுவலர் சஷிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.
- கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்திலிருந்து அண்ணாட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக வேதாரண்யத்திற்கு கூட்டு குடிநீர் திட்ட குழாய் சென்றடைகிறது.
இந்நிலையில், மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.
இதேபோல், பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு காவல் நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், மணக்குடி, ஓரடியம்புலம், நீர்முளை போன்ற கிராமங்கள் இருந்து ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஊரில் இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.
இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தலைஞாயிறில் பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும், விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளருமான சுர்ஜித் சங்கர் மற்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நாகப்பட்டினம்:
இன்று ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் துறை முகத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் மீனவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை கடற்படை முகாமில் இருந்து உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படையில் கடற்–படையினர், மீன்வளத் துறையினர் சென்று மீனவர்–களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






