என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணியன்தீவு உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.
    • மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், ஆறுக்காட்டுதுறை, புஷ்பவனம், மணியன்தீவு உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.இவர்கள் பைபர் மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    இதனால் நேற்று வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று அதிகாலை முதல் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக இன்றும் 2-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள ஏராளமானோர் வேலை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற குழந்தை உள்ளது. 8 மாதத்தில் மரியா ஆரோனிக்கா என்ற குழந்தை இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மரியா ஆரோனிக்காவை அவளது பெற்றோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மரியா ஆரோனிக்காவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மரியா ஆரோனிக்காவுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை மரியா ஆரோனிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதைகேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை மரியா ஆரோனிக்காவை பெற்றோர் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்ததில் டைப்-1 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. குழந்தைக்கு சர்க்கரை அளவானது 520 இருந்துள்ளது. இதுமாதிரியான நோய் 4 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி இந்த நோய் வரும் பட்சத்தில் 6 மாதத்தில் இருந்து 1 ஆண்டுக்குள் தான் தெரியவரும். 6 மாதத்துக்கு பிறகு தாய்பாலை தவிர வேறு உணவு குழந்தைக்கு உட்கொள்ள கொடுக்கும்போது இதுமாதிரியான சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    சம்பவத்தன்று மரியா ஆரோனிக்காவுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால், மூளை செயலிழந்து விட்டது. நோயின் தன்மை தீவிரமடைந்ததால், சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. எனவே ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டால் பெற்றோர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    • இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் வளரவேண்டும்.
    • இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கமாகும். இந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான ஒரு நல்ல தொடக்கமாகும்.

    இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் இது வளரவேண்டும்.

    கொங்கு மண்டலத்தில் இருக்கும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி பால் உற்பத்தியிலும் தங்களது உழைப்பின் மூலம் கணிசமான வருவாயை பெருக்கி வருகின்றனர்.

    அவர்களை போன்று தாங்களும் தங்களது உழைப்பில் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தி பால் உற்பத்தியை பெருக்கி தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும்.

    கடந்த மாதம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் பால் குளிரூட்டும் கருவி அமைக்கப்ட்டது.

    எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கும், பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றது.

    பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில ஆத்மா திட்டக்குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக் குழுத்தலைவர் தமிழரசி, பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
    • கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

    இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்தன.

    அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுவினர் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    சரணாலயத்தில் உள்ள கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடியக்கரைக்கு பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன. 2 நாட்கள் நடந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து பறவகைளை கணக்கெடுத்தனர்.

    இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் பறவைகளுக்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது.

    தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்ப தொடங்கி விட்டதாக கோடியக்கரை வன அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு வன அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.

    • பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
    • ரூ 20 லட்சம் மதிப்பில் கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 26-வது வார்டு பாரதி மார்கெட் பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் மற்றும் பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    அதே போல், ரூ 20 லட்சம் மதிப்பில், நாகை தம்பிதுரை பூங்கா மேம்படுத்துதல், கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

    இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, உறுப்பினர்கள் முகம்மது நத்தர், திலகர், பிரதீப், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புரவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் நாகை ராஜரா ஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா, புரவலர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளியின் ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.வும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவருமான வேதரெ த்தினம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளரும் தொழில் அதிபருமான சண்முகம், வேதாரண்யம் அரசு கலை கல்லூரி பேராசிரியர் பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராசேந்திரன், ஆனந்தராசு ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிலவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் நாகை ராஜரா ஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    மாணவர்க ளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் வழங்கினர். முடிவில் ஆசிரியர் செந்தமிழன் நன்றி கூறினார்.

    • இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கனக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணிநடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் கல்லூரி மாண வர்கள், வனத்துறையினர் என12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பூநாரை,செங்கால் நாரை கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணகான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.

    கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறை அலுவலர் ஆயூப்கான் தெரிவித்தார்.

    • 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பம்.
    • 439 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்ற முகாமில் ஆர்வத்துடன் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முகாமில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் ராயல் என்ஃபீல்டு, டாட்டா, ஆதித்யாபிர்லா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

    நாகை மாவட்டத்தில் 3488 நபர்கள், அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 186 நபர்கள் என 3674 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் 978 நபர்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு, அதில் 439 நபர்களுக்கு உடனடியாக பணியானை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 33 நபர்களுக்கு ரூ.14 லட்சத்து 10 ஆயிரம் நிதி உதவியை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    • நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.
    • மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக நாகை செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வு நேரங்களில் சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதிலும், இவர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல், பொதுசுகாதாரத்துறை விழிப்புணர்வு பாடல், நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.

    இந்நிலையில், மாவட்டம் சார்பில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நாகை செல்வன் பாடிய பாடல் நாகை மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது. அப்போது சமூக விழிப்புணர்வு பாடல் பாடி வருவதற்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பாராட்டினார்.

    • அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு.
    • உலக நன்மைக்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு செல்வநாக முத்து மாரியம்மன் கோவிலில் தை வெள்ளியை ஒட்டி உலக ஷேமத்திற்கு அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்னர் கோயிலின் பூஜகர் அம்மன் வேடமடைந்து தீச்சட்டி எடுத்து உலக ஷேமத்திற்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார்.விழா மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
    • பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை அவுரி திடலில் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையம், தானம் அறக்கட்டளை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ரகு தலைமை, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தாங்கினார்.

    நாகை புதிய பஸ் நிலையம் அவுரி திடலில் தொடங்கிய பேரணியானது நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது.பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தினை கடுமையாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது நாகை, சீர்காழி, காரைக்கால், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.

    • கருட பகவான் கோவிலை வலம்வர கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சுப்ரமணியருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் புகழ்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23-ந் தேதி கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    நேற்று லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.

    கருட பகவான் கோயிலை வலம் வர ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

    ×