என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி, ஆலங்குடி, மூங்கில்குடி, செம்பியன்மகாதேவி, இருக்கை, மகாதானம் சுக்கானூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கன மழையால் வயல்களை மழைநீர் சூழ்ந்தது. நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு 10 தினங்களில் தயாராக இருந்த 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதுவரை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிடவே இல்லை எனவும் உடனடியாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ்சில் பயணித்த 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

    அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க, முயற்சித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.தொடர்ந்து பேருந்து முகப்பு மற்றும் சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து பேருந்தில் பயணித்த 9 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் அன்பரசன் உட்பட பயணியான தெற்குப்பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி ஆகியோர் கால் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்துகிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு பேருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    • குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.
    • ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சாந்தோப்பு அருகே கரிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அருகில் உள்ள பச்சாந்தோப்பு, ஆற்றாங்கரை தெரு, தைக்கால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயிலிருந்து உபரி நீர் வருடம் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேர்கிறது.

    இதனால் கோடையிலும் குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டது.

    ஆனால் கடந்த 1 ஆண்டாக கரிக்குளம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    இதனால் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள், கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது.குளத்தின் படிக்கட்டுகள் சுகாதாரமற்று காணப்படுகிறது.

    இதனால் குளத்தினை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டு இக்குளம் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டு குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு நேரடி நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோட்டூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்

    பி.ஆர்.பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே அரசு கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நேரடியாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

    இந்த ஆய்வின் போது விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் பூரணா, புஷ்களாம்பிகா சமேத அன்னப்பசாமி கோவில் அமைந்துள்ளது.

    தை மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அன்னப்பசாமிக்கு பால், இளநீர், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறவில்லை.
    • கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது 10 சதவீத அறுவடை பணிகள் மட்டுமே நிறைவடைந்தது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மீதமுள்ள 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறாமல் கேள்விக்குறி ஆகியுள்ளது.

    இந்நிலையில், காப்பீடு நிறுவனம் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவடை பரிசோதனையை முடித்துவிட்டதாக கூறுவது வேதனை அளிக்கிறது.

    விவசாயிகள் வங்கிகளில் வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்துள்ளனர்.

    எனவே, காப்பீட்டு நிறுவனம் மீண்டும் அந்த பகுதிகளில் புதிய அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    பாதிக்கபட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும், மேலும், மேம்படுத்தபட்ட பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 100 சதவீத இழப்பீடு பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் கமல்ராம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கனமழையால் உப்பளங்கள் மழைநீரில் தேங்கியுள்ளது.
    • இதனால் உப்பள உற்பத்தியாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடி யக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின.

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் மீனவர்கள், விவசாயிகள், உப்பள உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    இதனால், பொதும க்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் நாலுரோடு பகுதியில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. அதில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் குரவப்புலம் பகுதியை சேர்ந்த டிரைவர் அஜித்கு மார் (வயது27) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
    • காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஒரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த அஜய் (20) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.

    • கடல் சீற்றம் காரணமாக நாகையில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25மீனவ கிராம மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர் குறிப்பாக. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், கல்லார், புஷ்பவனம் வெள்ளபள்ளம் ஆறுகாட்டுதுறை கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் பைபர் படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து ள்ளனர்.

    700 க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

    • வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய போலீசார் ரோந்து பணியாற்றினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கையை அடுத்து வேதாரண்யம் ஆறுகாட்டு துறை,கோடியக்கரை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர் மத்திய மாநில அரசுஉளவுத்துறை சீனா நாட்டை சேர்ந்த நான்கு போர் தமிழ் இளைஞர் படகை ஒட்டி வர அதில் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள.

    அதனை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்திருந்தது.

    இதையொட்டி வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியை வேதாரண்யம் போலிசார், கடலோர காவல் குழுமபோலீசார் சுங்கத்துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் என்ன விடிய விடிய கடற்கரை பகுதிகளிலும், மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இச்சோதனையால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது

    • எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த மரைக்கான் சாவடி பகுதியில் உள்ள கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் கெயில் நிறுவன எரிவாயு சேகரிப்பு மையம் உள்ளது.

    அங்கு உள்ள எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெகடர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வயல் வெளியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு தகவல் அளிக்க வேண்டும், மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து கெயில் நிறுவன ஊழியர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

    இதில் வருவாய்த்துறை பினர் தீயணைப்புத் துறையினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×