என் மலர்
நாகப்பட்டினம்
- ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து.
- வேதாரண்யம் ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று வேதாரண்யம் ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமையில் டெமோ ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ரெயிலை மறித்த காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் அகல ரயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 8-ந் தேதி ரெயில்சேவை தொடங்கிய நிலையில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.
- நாகூர் அனிபா நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
- நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கை விவாதத்தில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
திராவிட இயக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தன்னுடைய குரலால் அரும்பணியாற்றிய அவருக்கு சிறப்பு செய்யும் வகையில், நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
நாகூரில் அவருக்கு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.
மேலும் நாகூர் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.
இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.
- சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள குதிரை சிலைக்கு வண்ணம் பூசபட்டது.
- கலிதீர்த்த ஐயனார் சுவாமிக்குசிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
இக்கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனுக்கு ஏராளமான குதிரை சிலை வைப்பது வழக்கம்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள குதிரை சிலைக்கு வண்ணம் பூசபட்டது.
பின்னர் தங்ககுதிரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
விழாவில் ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, குதிரையாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி, தப்பு, கொம்பு உள்ளிட்ட நாட்டுபுற கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பெண்கள் பால்குடம் எடுத்து வர 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கலிதீர்த்த அய்யனார் கோவிலை வந்தடைந்தது வழிநெடுகிலும் பக்தர்கள் தங்ககுதிரைக்கு மாலை அணிவித்தனர்.
இதையடுத்து கலிதீர்த்த ஐயனார் சுவாமிக்குசிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.
இரவு வான வேடிக்கையும் அன்னதானமும் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
- வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி.
- பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட உள்ளன.
நாகப்பட்டினம்:
மீட்பு பணிகளில்தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று நாகை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அலுலர்கள் மலர்வலையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் 14ஆம் தேதி முதல் 20தேதி வரை பொதுமக்கள் கூடும் இடம், மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏர்படுத்தும் வகையில் நிகழ்சிகள் நடத்தபட உள்ளன.
- மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின், பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- பள்ளி கல்லூரிகளில் கழிப்பறை வசதியுடன் மகளிர் ஓய்வறை கட்டும் திட்டம்.
- பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா?
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகப்பட்டினம் தொகுதியில், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், நாகப்பட்டினத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி விரைவில் கட்டப்படும் என்றும், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் படிப்படியாக செய்யப்படும் என்றும் கூறினார்.
- கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- ஆத்திரமடைந்த முருகானந்தம் தாய் பானுமதியை கட்டையால் அடித்துள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு வாட்டாக்குடி நடுத்தெடுவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மகன் முருகானந்தம் (வயது 37). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா என்பவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாட்டாக்குடியில் தாயார் பானுமதியுடன் (65) மகன் முருகானந்தம் வசித்து வந்தார், நேற்று முன்தினம் தாயருடன் வீட்டில் மகன் முருகா னந்தம் மது போதை யில் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது மனைவி பிரிந்ததை பற்றி இருவரும் பேசியதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் தாய் பானுமதி கட்டையால் அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே பானுமதி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் இன்ஸ்பெக்டர்
ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தாயைகட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.
- வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும்.
- மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
வேதாரண்யம்:
கோவில் நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், கோவில் உரிமை கோரும் கிராம நத்தம், இனாம் நத்தம், இனாம் நிலம், குடிக்காணி, பட்டின மனை போன்ற இடங்களின் உண்மை நிலையை உயர்மட்ட குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் குடிக்காணி குத்தகை சாகுபடிதாரா்கள் சங்கம் சார்பில் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், குடிக்காணி சங்க தலைவா் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
மேலும், ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கோவில் செயல் அதிகாரி அறிவழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முடிவில் விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் தனியரசு நன்றி கூறினார்.
- படகில் டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்தவர்கள் கரை திரும்பினர்.
- பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் வேதையன் (வயது 58) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (65), கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த பன்னீர் (57) ஆகிய 3 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று காலை கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் 3 பேரும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், ஆறுகாட்டுதுறை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மீன் பிடிக்க சென்றவர்கள் திசை மாறி சென்றார்களா? அல்லது படகு எஞ்சின் பழுதாகி கடலில் தத்தளித்து கொண்டு உள்ளார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மாயமான 3 மீனவர்களை தேடி சென்ற சக மீனவர்கள் நடுக்கடலில் படகில் டீசல் இன்றி தத்தளித்து கொண்டிருந்தவர்களை பார்த்தனர். மேலும், அவர்களை தனது படகில் ஏற்றி ஆறுகாட்டுத்துறை கரைக்கு இன்று காலை கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் சென்ற படகும் மீட்கப்பட்டது.
காணாமல் போன 3 மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்ததை கண்ட உறவினர்கள் மற்றும் மீனவ கிராமமக்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்.
- 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், கோவில்பத்து ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் தியாகராஜன், தர கட்டுப்பாடு மேலாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அசோகன், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- தேர் ராஜ வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தரகுசாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இவ்வாலயத்தில் பங்குனி பெருவிழா கடந்த 4-ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன்அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோயிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
மேளதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பேர் சொல்லும் சாலைகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
- பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.
வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.






