என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கடந்த 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
    • 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

    அதன்படி கடந்த வரும் 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

    இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்படு, 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    இதற்காக கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள பால் குளத்தில் இருந்து புனித நீர் யானை மீது எடுத்து வந்து யாாகசாலையில் வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை பூர்ண பகுதி பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து நாளை (புதன்கிழமை 05.07.2023) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட உள்ளது நடக்கிறது.

    குடமுழுக்கு விழாவையொட்டி 400- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட உள்ளனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
    • சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    வேதாரண்யம்:

    ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்க வாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுனமகான் சித்தர் பீடத்தில் தினசரி பூஜை களுடன் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது.
    • புத்தகங்கள் வழங்கியது மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 1,500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது.

    கல்லூரிக்கு வந்த மாணவர்களை கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி, பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, ராஜ்குமார் மாதவன், மாரிமுத்து உள்ளிட்ட துறை தலைவர்கள் வாசலில் நின்று வரவேற்றனர்.

    தொடர்ந்து, கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    புத்தகங்கள் வழங்கி மாணவர்களை வரவேற்றது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர்.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர்.

    கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    • செல்லியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலின் 6-ம் ஆண்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக செல்லிஅம்மனுக்கு பால், பன்னீர் , சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடம் சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும். நாள்தோறும் இந்த வங்கிக்கு வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், தற்போது இந்த வங்கி கட்டிடம் மேற்காரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

    எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
    • பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சை யின் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலை வர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர். பின்னர், அதற்கு பதிலளித்து பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையின் பேசுகையில்:- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • மின் அலங்கார ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
    • நாகூர் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான நாகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இராகு கேது பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தின் 27ம் ஆண்டு பிர்மோத்சசவ பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து தியாகேசப் பெருமாள் வசந்த மண்டபம் எழுந்தருளி குதிரை வாகனத்தில் வீதி உலாவும், மின் அலங்கார ஓலச் சப்பரத்தில் ரிஷபம் வாகன காசி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் திருநாகவள்ளிஅம்மாள் சமேத நாகநாதசுவாமிகள் எழுந்தருளியதும், மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சிவ வாத்தியம், கேரளா மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மேலும், திருத்தேரோட்டத்தை யொட்டி நாகையில் இருந்து நாகூர் வழியாக காரைக்கால் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    • கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ராமகோவி ந்தன்காட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழா, கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான வேதரத்தினம், நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலா ளர் அணி கோவிந்தசாமி அனைவ ரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொடர்ந்து, தி.மு.க. கிளை செயலாளர் ராஜதுரை தி.மு.க. கொடியேற்றினார். இதில் அவை தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர், மாவட்ட செயலாளர் கவுதமன் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும், புடவை, வேஷ்டிகள் வழங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.

    • மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்கிறது.
    • மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி குத்தாலத்தில் அமைந்துள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின் வெட்டு ஏற்படுகிறது.

    மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்மாற்றில் உள்ள வயர்கள் அறுந்து விடுகிறது.இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் மின்தட்டுப்பாடு பல மணி நேரம் நீடிப்பதால் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் வாழ்மங்கலம் பகுதி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு போதிய குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிக்கல் சிங்காரவேலவர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • வருகிற 8-ந் தேதி பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்டுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோவிலில், ஜூலை 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    இதனால், நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி ஒருாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஜூலை 8-ம் தேதி சனிக்கி ழமை அன்று பள்ளிகளுக்கு வேலைநாளாக அறிவிக்கப்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் அடுத்த செட்டிப்புலம் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர், மாலை அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கிராமமக்கள், உபயதாரா்கள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கரியாப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.

    ×