மழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் அடுத்த செட்டிப்புலம் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர், மாலை அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கிராமமக்கள், உபயதாரா்கள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கரியாப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com