என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலாம் ஆண்டு மாணவர்களை புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
மாணவர்களை புத்தகம் கொடுத்து வரவேற்ற கல்லூரி முதல்வர்
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது.
- புத்தகங்கள் வழங்கியது மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 1,500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது.
கல்லூரிக்கு வந்த மாணவர்களை கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி, பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, ராஜ்குமார் மாதவன், மாரிமுத்து உள்ளிட்ட துறை தலைவர்கள் வாசலில் நின்று வரவேற்றனர்.
தொடர்ந்து, கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார்.
புத்தகங்கள் வழங்கி மாணவர்களை வரவேற்றது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story






