என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    “கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்து விட்டேன்” எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய என்ஜின் டிரைவரால் சீர்காழி அருகே 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் வந்து செல்வர். பயணிகள் ரெயில் மட்டும் வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்தில் தினமும் 2 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது வழக்கம். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2 மட்டும் தினமும் 2 தடவை நின்று செல்லும்.

    இதேபோல் நெய்வேலியில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு தினமும் சரக்கு ரெயில்கள் நிலக்கரி ஏற்றி இவ்வழியே அதிகளவில் செல்லும். ஆனால் இந்த ரெயில்கள் எந்த ரெயில் நிலையத்திலும் நின்று செல்லாது.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலைய மாஸ்டர் அந்த ரெயில் தடையின்றி செல்ல சிக்னலை மாற்றி விட்டு ரெயில் நிலையத்தை கடந்து செல்ல காத்திருந்தார்.

    ஆனால் அந்த ரெயில் எந்த முன்னறிவிப்புமின்றி வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்டேசன் மாஸ்டர் உடனடியாக சரக்கு ரெயிலை இயக்கி வந்த என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் சென்று ‘எதனால் ரெயிலை நிறுத்தினீர்கள்’ என்று கேட்டார்.

    அப்போது அவர் “எனக்கு 12 மணிநேரம் மட்டுமே பணி. ஆனால் கூடுதலாக 15 நிமிடம் ரெயிலை இயக்கி வந்துள்ளேன். இதனால் மேற்கொண்டு என்னால் ரெயிலை இயக்க முடியாது” என்று கூறியதால் ஸ்டேசன் மாஸ்டர் அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்கு புறப்பட தயாராக இருந்த திருப்பதி-காரைக்கால் ரெயிலும் இயக்க தாமதமானது. மேலும் அதிக பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சுமார் 100 மீட்டர் வரை பெட்டிகளுடன் நின்றதால் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் ரெயில்வே கேட்டை கடந்தும் பெட்டிகள் நின்றிருந்தது. இதனால் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் மினிபஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    இதனால் ஸ்டடேசன் மாஸ்டர் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் சென்று என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் ரெயிலை இயக்கி செல்லுமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து சுமார் 2 மணிநேரம் வரை ரெயில் வைத்தீஸ்வரன் கோவிலில் நிறுத்தப்பட்டது. பின்னர் ‘அருகிலுள்ள மாயவரம் ரெயில் நிலையத்திலாவது தற்சமயம் சரக்கு ரெயிலை கொண்டு சென்று நிறுத்துங்கள்’ என்று ஸ்டேசன் மாஸ்டர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து சற்று இறங்கி வந்த டிரைவர் 2 மணி நேர தாமதத்துக்குப்பிறகு சரக்கு ரெயிலை அங்கிருந்து இயக்கி சென்றார். இதன் காரணமாக இவ்வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்கள் அருகில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    அப்போது ரெயில் பயணிகள் ஆவேசத்துடன், ‘இதுபோன்ற ரெயில்வே ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக அக்கறை கூட இல்லாத இவரை போன்ற சிலரால் பல்வேறு பொதுப்பணிகள் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி வந்த வாலிபர் மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் சிவதாஸ் (வயது22). இவர் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி அண்டர்காட்டில் இருந்து வேதாரண்யத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது அந்த வழியாக ஞானவிக்னேஷ், விஜயராகவன் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவதாஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானவிக்னேசும், விஜய ராகவனும், காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சிவதாஸ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவதாசின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    வேதாரண்யம் அருகே வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார். #Loksabhaelections2019 #OSManian
    வேதாரண்யம்:

    தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரடியன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார்.

    இதேபோல வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கையாள தெரியாததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குபதிவு 45 நிமிடம் தாமதமாக 7.45 மணிக்கு தொடங்கியது. சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதாகி 6 பேர் போட்ட ஓட்டு டெலிட் ஆகிவிட்டது. பின்னர் அதில் 4 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டு அவர்கள் ஓட்டை பதிவு செய்தனர். #Loksabhaelections2019 #OSManian
    மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த சம்பவத்தில் தட்டிகேட்ட பா.ஜனதா பிரமுகரை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பெரிய கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர், பாரதீய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை திருப்பூண்டி அருகே உள்ள கீரைநேரி ஏரி கரையில் செந்தில்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் திருப்பூண்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இதயத்துல்லா(41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் மனைவியிடம் இதயத்துல்லா தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், இதயத்துல்லாவிடம் தகராறு செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் இதயத்துல்லா தனது நண்பரான கீழ்வேளூர் தாலுகா பொரவச்சேரி கீழத்தெரு சேர்ந்த பரமேஸ்வரன்(41) என்பவரை அழைத்து வந்து செந்தில்குமாருடன் காரில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி மதுகுடித்து உள்ளனர். இந்த சந்தர்ப்பந்தை பயன்படுத்தி 2 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கீரைநேரி ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கீழையூர் போலீசார் இதயத்துல்லா, பரமேஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 2-வது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணக்குடியை சேர்ந்தவர் கமலகண்ணன். இவரது 2-வது மனைவி சத்தியபாமா (வயது 30). இவர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கமலகண்ணன் என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது 25 பவுன் நகையும், ரூ.10 லட்சம் மதிப்புடைய பொருட்களும் வரதட்சனையாக கொடுத்தோம். திருமணத்திற்கு பின்புதான் அவர் தனது முதல் திருமணத்தை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் மேலும் வியாபாரம் செய்ய ரூ.5 லட்சம் வாங்கி கொடு என்று என்னை கொடுமைப்படுத்தி வந்தார்.

    இந்த நிலையில் அவர் குத்தாலத்தை சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணை 3-வது திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி கேட்டபோது, கமலகண்ணன் என்னை அடித்து சித்ரவதை படுத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

    எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்த கமலகண்ணன், அவரது அண்ணன் சீனிவாசன் மீதும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் குணசேகர், செந்தில் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வேப்பகுளம் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி (30).இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    நேற்று மாலை ராஜபாண்டிக்கும், கோடீஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ராஜபாண்டி கோடீஸ்வரியை அடித்து கீழே தள்ளி உள்ளார் அப்போது தலையில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இந்த கொலை சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கோடீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக ராஜபாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது 23). இவர் மீது நாகை மற்றும் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரைத்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறையில் கொடுத்தனர்.

    நாகை அருகே பா.ஜனதா நிர்வாகியை வெட்டிக் கொலை செய்து ஏரியில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பா.ஜனதா நிர்வாகியை வெட்டிக் கொலை செய்து ஏரியில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டி அருகே கீழையூர் காவல் சரகம் காமேஸ்வரம் கீரன் ஏரி உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஏரியில் ஒருவர் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் கீழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் ஏரியில் இருந்து பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவரின் உடலில் அரிவாளால் வெட்டப்பட்ட வெட்டுக் காயங்கள் இருந்தது. இதனால் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை நாகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி துரை மகன் செந்தில் குமார்(வயது40) என்பது தெரியவந்தது. இவர் பா.ஜனதா கட்சியில் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் தேர்தல் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்தில்குமாரை மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாகையில் பா.ஜனதா நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு உமா ராணி என்ற மனைவியும், அனுஷ்யா(7) என்ற மகளும் உள்ளனர்.

    பா.ஜனதா பிரமுகர் கொலையுண்ட சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூரை அடுத்த சன்னாமங்களம் காரைமேடு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் கவியரசன் (வயது 17) இவர் நேற்று இரவு நாகூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகூர் தேரடி மெயின் ரோட்டில் லோடு வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்த நாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதை வழக்கு பதிவு செய்து போலீசார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் இலுப்பூர் சத்திரம் அருகே கீழ்வேளூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்

    விசாரணையில் அவர்கள் திருக்குவளை மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது 38) கச்சனம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் அய்யப்பன் ( வயது 19)ஆகியோர் என்பதும் அவர்கள் உரிய அனுமதியின்றி கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் அள்ளிச் சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் ஐயப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதில் லாரி உரிமையாளர் பாங்கலை சேர்ந்த முருகையன் மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் காவல்சரகம் மருதூர் வடக்கு ராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கத்திரிப்புலத்தை சேர்ந்த பிரியா (வயது 35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. வைத்தியநாதன் 108 ஆம்புலன்சில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டின் அருகே உள்ள மரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்துவருகிறார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கர்ப்பிணி பெண் மாயமானது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தேத்தாகுடி வடக்கு தம்பிக்கவுண்டர் காட்டை சேர்ந்தவர் அருள் (வயது 30). இவருக்கும் கத்தரிப்புலத்தை சேர்ந்த சத்யா (27) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் சத்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கத்தரிப்புலத்தில் உள்ள தனது தாய் மஞ்சுளா வீட்டில் தங்கி இருந்த சத்யா நேற்று தனது அக்கா சரண்யா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    இதுகுறித்து மஞ்சுளா, வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை தேடிவருகின்றனர்.
    ×