என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதாரண்யம் மாயம்"

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கர்ப்பிணி பெண் மாயமானது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தேத்தாகுடி வடக்கு தம்பிக்கவுண்டர் காட்டை சேர்ந்தவர் அருள் (வயது 30). இவருக்கும் கத்தரிப்புலத்தை சேர்ந்த சத்யா (27) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் சத்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கத்தரிப்புலத்தில் உள்ள தனது தாய் மஞ்சுளா வீட்டில் தங்கி இருந்த சத்யா நேற்று தனது அக்கா சரண்யா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    இதுகுறித்து மஞ்சுளா, வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை தேடிவருகின்றனர்.
    ×