என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் சதீஷ்(வயது 30). இவர் கூலி வேலை செய்து வந்தார். சதீசின் மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
இதனால் சதீசின் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி சதீசின் வீட்டுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள் பக்கத்து வீட்டு பெண் வேலைக்காக சதீசின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சதீஷ், அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.
குளிர்பானத்தை குடித்ததும் அந்த பெண் மயங்கி விழுந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சதீஷ், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே திருவாரூர் மெயின்ரோடு பேச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சக்திவேல், பிரித்திவிராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த பிரித்திவிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சக்திவேலின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்திவேல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதி மாசாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45) கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ம் தேதி மாலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது பேராலயம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மாரிமுத்து விஷம் குடித்த இடத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கடன் தொல்லை காரணமாகதான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கீச்சாங்குப்பம் வடக்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 4 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்த போது ராமச்சந்திரன் படகிலிருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கினார்.
அவருடன் சென்றவர்கள் ராமச்சந்திரனை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து நாகை கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 30). தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி சூர்யா (29).
இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாக உள்ள சூர்யா, சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.
அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் சென்றார். குடிபோதையில் சென்ற ஜெயக்குமார், தனது மனைவி சூர்யாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடிபோதையில் மனைவியை தாக்கி விட்டோமே என்று மனம் உடைந்த வங்கி ஊழியர் ஜெயக்குமார், வைத்தீஸ்வரன்கோவிலில் ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் கொடுத்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே புதுதுறை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு வசந்தா என்ற மனைவியும், வசந்த் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சேகர், வெள்ளப்பள்ளம் உப்பனாறு கரையோரம் உள்ள கருவேல மரத்தடியில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனே திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து சேகர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்த சேகரின் நெற்றியில் காயம் இருந்தது. இதனால் அவரை யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம்? என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
பின்னர் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சேகரின் மனைவி வசந்தா, திருவெண்காடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே வானகிரி கிராமம் மீனவர் தெருவில் ரேணுகாதேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஐஸ் விற்பனை செய்தனர்.
கடும் கோடை வெயிலில் கோவிலுக்கு திரண்டு வந்திருந்த பக்தர்கள் அப்பகுதியில் விற்பனை செய்த பல்வேறு கம்பெனிகளில் குச்சி ஐஸ், குல்பி ஐஸ், பார் ஐஸ் போன்றவைகளை வாங்கி சாப்பிட்டனர்.
அதேபோல் தங்களது குழந்தைகள் விரும்பி கேட்ட ஐஸ்களையும் வாங்கி கொடுத்தனர். ஐஸ் சாப்பிட்டு வீடு திரும்பிய வானகிரி கிராமத்தை சேர்ந்த பல குழந்தைகள், பெரியவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் வானகிரி வடக்கு தெருவை சேர்ந்த விவேகா (வயது3), மதுஷா (3), கனி(5), பூம்புகார் பகுதியை சேர்ந்த அபிஷ் ஆனந்த்(2),மித்ரன்(2), தரங்கம்பாடியை சேர்ந்த மு.சபிதா(5), வானகிரியை சேர்ந்த மித்ரன் (3), கவிஷா (5),பூம்புகாரை சேர்ந்த கனிஷ்கா (6), வானகிரியை சேர்ந்த ரஞ்சித் (12), பிரித்தி (14), பூம்புகாரை சேர்ந்த பவித்ரா(4), அனுசியா (2), சந்தியா(22),சர்மா(11), வசந்த் (2), பிரமிதா(4), முகேஷ்(5), அனு(4), நமீதா (4) உள்ளிட்ட 22 பேர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் தேவலதா தலைமையில் மருத்துவ குழுவினர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதி உள்ள 85-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி தாசில் தார் சபீதாதேவி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வானகிரி கிராமத்தில் சுகாதார குழுவினர்கள் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐஸ் மாதிரியை திரட்டி ஆய்வுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரிகள், காலாவதியான ஐஸ்சை விற்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பூம்புகார், சீர்காழி, திருவெண்காடு, செம்பனார் கோவில் பகுதிகளை சேர்ந்த 4 ஐஸ் கம்பெனிகளில் சுகாதார துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மணிக் கிராமம் பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் நடத்தி வந்த ஒரு ஐஸ் கிரீம் கம்பெனிக்கும், திருவெண்காடு பகுதியில் மற்றொரு ஐஸ் கம்பெனிக்கும் சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் காலாவதியான ஐஸ்கீரிம்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கையில் மஞ்சள் பூசிய குச்சியில் வேப்பிலைகளை கட்டி கொண்டு வந்த பக்தர்கள் அதனை வைத்தீஸ்வரன் கோவில் கொடி மரத்து முன்பு போட்டு விட்டு சென்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதம் 2-ம் செவ்வாய் கிழமையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கு மாட்டு வண்டிகளிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியை சேர்ந்த ஒருவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது கனவில் தோன்றிய தையல் நாயகி அம்மன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும்படி கூறியுள்ளார். அதனை ஏற்று அவர் பாதயாத்திரையாக வந்து தையல் நாயகி அம்மனை தரிசனம் செய்ததும் அவரின் நோய் குணமாகி விட்டது.
இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தையல் நாயகி அம்மனை தங்களது குல தெய்வமாக வழிபட தொடங்கினர். அவர்கள் சித்திரை 2-வது செவ்வாய் கிழமை கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை உருவாக்கினர். அன்று முதல் இந்த வழிபாடு காலம் காலமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசாரின், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்ட 53 மீனவ கிராமங்களில் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், 19 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி கடற்கரை சாலை, பேராலயத்தின் 4 புறங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே பேராலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பூம்புகார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ராகுல்ட்ராவிட், அகத்தியன் என்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள்தான் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்கள நகையை ஒரு மின்கம்பம் அருகே புதைத்து வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்து சரவணனிடம் ஒப்படைத்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் திடீரென மழை பெய்தது.
அப்பகுதியில் ஒரு சில கூரை வீடுகளில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கி இருந்த வீரமணி மற்றும் சந்திரா இருவரும் காயம் ஏற்பட்டது. மேலும் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 12 பேர் லேசான காயம் அடைந் தனர்.
மின்னல் தாக்கிய 14 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டனர் மின்னல் தாக்கியதில் வீடுகளில் இருந்த மிக்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்தன.
இதேபோல் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. மேலும் மதுக்கூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் லேசான மழை பெய்தது.
கடந்த 2 மாதங்களாக வெயிலில் தவித்து வந்த மககள், திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் அப்பகுதியில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.






