என் மலர்

  நீங்கள் தேடியது "woman molestation"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மதுரை:

  சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் ஓவியா (வயது 25). வக்கீலான இவர், மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

  மதுரை வண்டியூர் பாண்டிக்கோவில் தெருவைச் சேர்ந்த வக்கீல் தேவக்குமாரும் (29) நானும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். தற்போது பெற்றோரின் தூண்டுதலால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் தேவக்குமார், அவரது தந்தை விஜய நடராஜன் (60) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

  ராஜபாளையம்:

  ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது28). இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 வருடமாக முருகனும், 23 வயதுடைய இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

  அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியை முருகன் கற்பழித்தார்.

  இந்த நிலையில் முருகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முருகனிடம் கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தினார். அப்போதும் முருகன் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமண ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

  பேரையூர்:

  திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மச்சக் காளை. இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). இவர் வயிற்று வாலியால் அவதிப்பட்டார். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது மகாலட்சுமி வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

  அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் குமரேசன் (25) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகாலட்சுமி தெரிவித்தார்.

  இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2 பேரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குமரேசன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் வேலை பார்த்து வரும் குமரேசனை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீஞ்சூர் அருகே அருள்வாக்கு கூறுவதாக ஏமாற்றி பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

  பொன்னேரி:

  சென்னை போரூரை சேர்ந்தவர் ராஜசேகர். சாமியாரான இவர், மீஞ்சூரை அடுத்த தேவதானத்தில் உள்ள நிலத்தடி கருப்பசாமி கோவிலில் அமாவாசை, பவுர்ணமி தினத்தில் அருள் வாக்கு கூறி வந்தார்.

  இந்த நிலையில் கடந்த வாரம் தடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் அருள்வாக்கு கேட்பதற்கு கோவிலுக்கு சென்றார்.

  அப்போது இளம்பெண்ணிடம், சாமியார் ராஜசேகர் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதனை நம்பி இளம் பெண் சென்ற போது அவருக்கு ராஜசேகர் செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்தார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொன்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  அவர் இதேபோல் வேறு பெண்கள் யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

  மதுரை:

  மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ஒரு டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

  அப்போது இவருக்கும், அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகரன் (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

  இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி ராஜசேகரன், அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார்.

  இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ராஜசேகரன், அந்த பெண்ணிடம் பழகுவதை நிறுத்தினார். மேலும் பிரச்சினை செய்ததாகவும் தெரிகிறது.

  இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  65 வயது மூதாட்டியை விவசாயி கற்பழித்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சேணியாகுளிக்கரை பகுதியை சேர்ந்தவர் சீதை (வயது 65). துப்புரவு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்நத விவசாயி ரமேசுக்கும் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் சீதையும், ரமேசும் ஒன்றாக அமர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் சம்பவத்தன்று சீதை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், திடீரென சீதையை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது.

  அப்போது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வந்தனர். அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைநத் ரமேஷ், இந்த வி‌ஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

  இந்த சம்பவம் பற்றி வலங்கைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சீதையை கற்பழித்த ரமேசை கைது செய்தனர். தற்போது மூதாட்டி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  65 வயது மூதாட்டியை விவசாயி கற்பழித்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்குடி அருகே இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

  காரைக்குடி:

  காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் டெலி போன் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 31). இவர் கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துக்குமார் (21) என்பவர் மதில் சுவர் ஏறிக்குதித்து உமா மகேஸ்வரியை மானபங்கப்படுத்த முயன்றார்.

  உமா மகேஸ்வரி சத்தம் போடவே அவரை தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டார்.

  அவர் தப்பிச் செல்லும் போது இங்கு நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

  இது குறித்து உமா மகேஸ்வரி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் போது மணி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்ட தாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

  பேரையூர்:

  திருமங்கலம் மவுலானா ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகைராஜா. இவருடைய மகள் ராஜலட்சுமி என்ற செல்வி (வயது 21). பட்டதாரியான இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

  திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது அதே கல்லூரியில் படித்த திருமால் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலமாக மாறியது.

  அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அஜித்குமார் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். இந்த நிலையில் அவர் திடீரென என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

  இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னை திருமணம் செய்ய அஜித்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும்.

  இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருமணம் ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #BJP #Chhattisgarh
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜீவ் பவன் திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அங்கே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

  அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என குறிபிட்டுள்ளார். மேலும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குற்றம்சாட்டிய அவர், பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பெயர் பனாமா ஆவணங்களில் வந்தபோது அதில் அவர்  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் சத்தீஸ்கரில் பா.ஜ.க முதல்மந்திரியின் மகனின் பெயர் பனாமா ஆவணங்களில் வரும் போது, அதுதொடர்பாக இன்னும் விசாரணை கூட ஆரம்பிக்கவில்லை  இதுதான் பாஜக நாட்டை பாதுகாப்பதா? என விமர்சித்துள்ளார். #RahulGandhi #BJP #Chhattisgarh
  ×