என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அமைப்பு சார்பில் உணவு வழங்கபட்டது.
    • 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் முன் உதவிக்கரங்கள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜாதி மத வேதமின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிறிஸ்டின் சார்பில் டேவிட், வேளாங்கண்ணி இஸ்லாமிய பைத்துல் மால் தலைவர் ஜலால், இந்து சமயம் சார்பில் வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலய குருக்கள் நீலகண்டன், உள்ளிட்ட 3ம் மதங்களை சேர்ந்த அவர்கள் மத முறைப்படி ஜெபம்,மந்திரம் ஓதி,தொழுகை நடத்தி வேளாங்கண்ணி பேரால யத்தை சுற்றி உள்ள ஏழை எளிய ஆதரவற்ற முதியோர்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி, முட்டை, தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் இனிப்புகள் வழங்கி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்வு பொது மக்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதில் உதவிகரங்கள் நிறுவனத் தலைவர் ஆண்டனி பிராங்கிளின் ஜெயராஜ்,தலைமை தாங்கினார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜுலியட் அற்புதராஜ்,

    ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார்கள் சார்லஸ், பாத்திராஜ், டேவிட், ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

    லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பஜீருல்லா, பாலசு ப்ரமணியன், மைக்கேல், ஆரோக்கியராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சாமிநாதன், சட்டநாதன், கௌதமன், இன்னர் வீல் சங்க தலைவி கலைச்செல்வி ,

    அன்பே கடவுள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பீட்டர்ராஜ், சாமிநாதன், இஸ்லாமிய நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உதவிக்கரங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள்.
    • கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாள் தொடர் விடுமுறையால் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள்.

    இந்த ஆண்டு நாகப்பட்டி னத்தில் நிலவும் தொடர் கனமழை காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி, வேளாங்கண்ணி கடற்கரை, முடி காணிக்கை செலுத்தும் இடம்,கடைவீதி மெழுகுவர்த்தி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் குறைவான கூட்டமே காணப்படுகிறது.

    எப்பொழுதும் அதிக கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம் கலை இழந்து காணப்படுகிறது. கடற்கரையில் அதிக கூட்டம் இல்லாததால் சிரமம் இல்லாமல் குடும்பத்துடன் நீராட முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

    மேலும் தீபா வளிக்கு அதிக வியாபாரம் நடக்கும் என எதிர்பார்த்த வியாபாரி களுக்கு உரிய விற்பனை இன்றி ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

    • மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
    • சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பெரு நாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக பெருநாட்டான் தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சாலை சேதம் அடைந்து மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.

    மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • மானிய விலையில் 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டாரத்தில் 2023-24 ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் ஊராட்சி செயலர் பிரேம் குமார்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள், விவாசயிகள் உடனிருந்தனர்.

    • பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், வாசுகி மீது மோதியது.
    • மருத்துவமனையில் வாசுகி பரிதாபமாக இறந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கரன்புலம் 3ஆம் சேத்தி அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் பாண்டியன்.

    இவரது மனைவி வாசுகி (வயது 40).

    இவர் சம்பவதன்று வேதாரண்யம் காந்தி நகரில் உள்ள தன் மகளுக்கு தீபாவளி வரிசை பொருட்கள் கொடுக்க சென்றார். பின்னர் சீர்வரிசை கொடுத்துவிட்டு தனது மருமகன் பூவரசன் (27) என்பவரிடம் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து ஊருக்கு செல்வதற்காக காரியப்பட்டினம் மின்சார வாரியம் அருகே வந்துள்ளார்.

    அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், வாசுகி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் வாசுகி பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக இவர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு வாசுகி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அகஸ்தியம்பள்ளி கணக்கன்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பதாஸ் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகே ஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

    பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதைப்போல வேதாரண்யம் வேதமிருத ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோ மநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    ஆங்காங்கே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

     நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்

    வேளூர் அருகே ஆழியூர் பிரிவு சாலையில் சிக்கவலம் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 42), சிக்கல் அய்யனார்

    கோவில் தெருவில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (55)

    ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
    • பலர் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெருநாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெருநாட்டான்தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம்,கங்களாஞ்சேரி,திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறிவழகன் அகல்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்
    • தீபாவளி முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் 25-வது வார்டு கவுன்சில் கோடியக்காடு, கோடியக்கரை பகுதியை உள்ளடக்கியது.

    இந்த வார்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த அறிவழகன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இவர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் துணை பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.

    இவர் தான் ஏற்படுத்தி உள்ள அகல்யா அறக்கட்ட ளையின் சார்பில் அப்பகுதி மக்களுக்கு தீபாவளி முன்னிட்டு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு கோடியக்காடு கிராமத்தில் உள்ள 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.

    கோடியக்கரை கிராமத்திற்கு விரைவில் அங்கு உள்ள குடும்ப பெண்களுக்கு இலவச சேவைகள் வழங்கப்படும்.

    முன்னதாக வேதாரண்யம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும், 25 வது வார்டு வேதாரண்யம் ஒன்றிய கவுன்சிலருமான அறிவழகன் சட்டமன்ற உறுப்பினரை சால்வை அணிவித்து வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன், நாகை அ.தி.மு.க. பிரமுகர் சிவபெருமான், கோடியக்காடு அதிமுகவை சேர்ந்த தமிழ்வாணன், பக்கிரிசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

    • புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல், கட்டு மாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து மேலப்போலகம், வவ்வாலடி பகுதிகளிலும் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பால முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஆதிதிராவிடர் விடுதி தேர்வு நிலை குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • வேதாரண்யத்தில் மகளிர் சுய உதவி குழு பராமரிப்பு பயிற்சி நடந்தது.
    • 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்டாரத்திற்கு உட்பட்ட 2023- 24 ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு ஊக்கநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆளுமை பொறுப்புணர்வு மற்றும் புத்தக பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது.

    மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார இயக்க மேலாளர் அம்புரோஸ்மேரி தலைமை வகித்தார் மாவட்ட மகமை அலுவலர் பிரியா முன்னிலை வகித்தார்.

    இதில் 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    • மேலப்படாகை கடைவீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மேலப்படாகை கடைவீதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.

    இதில் சுமார் 300 கிலோ கஞ்சா பிடிப்பட்டது.

    இது தொடர்பாக 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கீழையூர் போலீசார் வீர முரசு, சசிக்குமார், சுதர்சன், விக்னேஷ், வைரகுமார், முருகானந்தம், ஹரிகிருஷ்ணன், கோபிநாதன் உள்பட 9 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×