அகரக்கொந்தகை ஊராட்சியில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.மானிய விலையில் 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்:

திருமருகல் வட்டாரத்தில் 2023-24 ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகளை வழங்கினார்.

இதில் ஊராட்சி செயலர் பிரேம் குமார்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள், விவாசயிகள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com