என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனையில் கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
- நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் கலெக்டர், எம்,எல்.ஏ திடீர் ஆய்வு செய்தனர்.
- பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக எக்ஸ்ரே பிரிவு மற்றும் ஜெனரேட்டர் வசதி குறித்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், குறைகளை விரைந்து சரி செய்யுமாறு அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story






