என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மகாராஜபுரம் வயல்வெளியில் ஐயப்பன் என்பவர் வலை வைத்து 6 மடையான் பறவைகளை பிடித்தார்.
    • போலீசார் விசாரணை செய்து வழக்குபதிவு செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மகாராஜபுரம் பகுதியில் திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வனஉயிரின காப்பாளர் (கூடுதல் பொ) தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் உத்தரவின் பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனவர் ராமதாஸ், மகாலெட்சுமி, வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், நவநீத கிருஷ்ணன், பாண்டியன் குழுவினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து 6 மடையான் பறவைகள் பிடித்த தலைக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 40) என்பவரை பறவைகள் மற்றும் வலைகளுடன் பிடித்து விசாரணை செய்து வழக்குபதிவு செய்யப்பட்டு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பின்பு, அவரிடமிருந்த 6 மடையான் பறவைகளை கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் மற்றும் வன பணியாளர்கள் முன்னிலையில் முனியப்பன் ஏரி சரணாலய பகுதியில் பறக்கவிட்டப்பட்டது.

    • பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் திருக்குவளை தாலுகா பண்ணைத் தெருவில் அமைந்துள்ள பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அலமாரியின் பூட்டை உடைத்து பார்த்தனர். அதில், வள்ளி உலோக சிலை (உயரம் 38.5 செ.மீ., அகலம் 16 செ.மீ., எடை 7.3 கிலோ) புவனேஸ்வரி அம்மன் (உயரம் 30 செ.மீ., அகலம் 13 செ.மீ., எடை 6.2 கிலோ) திருஞான சம்பந்தர் (உயரம் 43 செ.மீ., அகலம் 12 செ.மீ., எடை 9.4 கிலோ) ஆகிய 3 சிலைகள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சிலைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்-யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது சமிக்ஜை செய்தும் நிற்காமல் விசைப்படகு சென்றதாக கூறி இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை வானகிரியை சேர்ந்த மீனவர் வீரவேல் (வயது 31) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மேலும் விசைப்படகு மீதும் பல குண்டுகள் பாய்ந்தன.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வீரவேல் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்கள் காயத்துக்கு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள் விசைப்படகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து படகை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஷ வண்டுகள் பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு.
    • நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் விஷ வண்டுகள் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    உடன் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி செயலர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாச னிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.

    மனுவின் பேரில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு போலீசார் இணைந்து கங்களாஞ் சேரிரியில் காலனி தெரு, பூண்டி, கீழத்தெரு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    • சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவில்லை.
    • சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.

    இவரது மனைவி கோமதி (வயது 45).

    இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு குண்டையூர் செல்லும் பாலம் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது.

    சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவி ல்லை. பல இடங்களில் தேடி பார்த்து ம் கண்டுபிடிக்க முடியவி ல்லை.

    இந்த நிலையில் சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுக் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.
    • இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கடைவீதி மற்றும் தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா நகர் பகுதிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகமாக கூடும் இடங்களாகும்.

    நாள்தோறும், கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம். நகரின் முக்கிய பகுதியாக காணப்படும் இந்த இடங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. நடந்து செல்வோரை சில நாய்கள் கடித்துவிடுகிறது.

    மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதனால், பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கடல்நீர் சூழ்ந்தது.
    • படகில் உள்ள மீன்பிடி உபகரண பொருட்களை நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி மீனவர் காலனி பகுதியிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடி தொழிலுக்கு மீனவர்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் சில தினங்களாக நிலவி வந்த புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில் திடீரென கடல் சீற்றம் அதிகரித்து கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளது.

    மேலும் கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை சுற்றியும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

    மீனவர்கள் ஏற்கனவே நங்கூரமிட்டு கட்டப்பட்ட படங்களை மேலும் தற்பொழுது கடல் நீரில் அடித்து செல்லாத அளவிற்கு பாதுகாப்பாக கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக படகில் உள்ள மீன் பிடி உபகரண பொருட்களையும் இடுப்பளவு நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது கடல் நீர் உப்புகாமல் தடுக்க நிரந்தரமாக தடுப்பு அணை அமைத்து, பாலம் அமைத்து தரவேண்டும் விழுந்தமாவடி மீனவ காலனி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிப்பூ சாகுபடி.
    • ஒரு கிலோ விலை கிலோ ரூ. 120 முதல் ரூ. 150வரை விற்பனையாகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் பஞ்சநதிக்குளம் நெய்விளக்கு குரவப்புலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிபூ சாகுபடி நடைபெறுகிறது.

    நாள் தோறும் இங்கு விலையும் செண்டி பூக்கள் கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, மற்றும் உள்ளூர் பூ வியாபரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இத்தொழிலில் ஏரளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கமாக இங்கு விளையும் சென்டி பூ ஒரு கிலோ 20 முதல் 40 வரை விற்பனையாகும் நேற்று தீபாவளியை முன்னிட்டு சென்டிபூக்களின் ஒரு கிலோ விலை கிலோ ரூபாய் 120 முதல் முதல் 150வரை விற்பனையாகிறது.

    நேற்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு செண்டி பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
    • நமது சமுதாயத்தை சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முக்குலத்து சமுதாய இளைஞர்களே நம் முன்னோர்களின் விழாக்களான தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் குருபூஜை, ராஜராஜ சோழன் சதய விழாவிற்கு வரும் இளைஞர்கள் கண்ணியத்தையும், கட்டுப்பாடையும் பின்பற்ற வேண்டும்.

    வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது, தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவது, பிற சமுதாய மக்களை பற்றி கோஷங்கள் எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

    இது நம்மையும், நமது சமுதாயத்தையும் சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும். மாலை அணிந்து விரதம் இருந்து வணங்குங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர் விடுமுறை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    தீபாவளிவிடுமுறையை யொட்டி வேளாங்கண்ணி யில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்நாகப்பட்டிணம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றதும் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது அதன்படி நேற்று தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர் பேராலய த்தில் நடைபெறும் திருப்பலி களிலும், பழைய மாதாஆலயம், நடுத்திட்டு, தியானகூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, , உள்ளிட்ட இடங்க ளிலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்க லுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    • இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.
    • வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அக்டோபர் 28-இல் கல்விக் கடன் முகாம் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஷா நவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அக்டோபர் 28-ஆம் தேதி கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.

    இது தொடர்பான முழு விபரங்களை ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சித்த லைவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையை உருவாக்குவதே இந்த கல்விக் கடன் முகாமின் நோக்கம் என்று எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    கல்விக் கடன் தொடர்பாக இதுவரை தம்மிடம் மனு அளித்த அனைவருக்கும், இந்த முகாம் பற்றிய தகவலை எம்.எல்.ஏ அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளதாகவும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,
    • இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடற்கரை வெறிச்சோை காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரையில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடத்திற்குகொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுகளை காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இந்தநிலையில் இன்று வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.கடல் சீற்றத்தால் கடற்கரை யில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீனவர்கள் படகுகளை இழுவை டிராக்டர் மூலம் படகுகளை மேடான பகுதிகளுக்கு அவசரம் அவசரமாக கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்மற்றும் கடற்கரை ஓரத்தில் மீன்பிடி வலைகள் அடுக்கப்ப ட்டுள்ள நிலையில் தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடிவலைகளையும் வாகனம் மூலம் பாதுகா ப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    புயல் எச்சரிக்கை கார ணமாக மீன்வளத்துறை எச்சரிக்கை அடுத்து கோடிய க்கரை, ஆறுகா ட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தால் கடற்கரை பகுதி வெளிச்சோடி காணப்படுகிறது.

    ×