என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
    • அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார் வழிகாட்டுதலின் பேரிலும், திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் 30 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், இலவச மார்பக பரிசோதனைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் மணவாளன் முன்னிலை வசித்தார்.

    இதில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மார்பக புற்றுநோய் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    • மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மணிபாரதி முதலிடம்.
    • 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெகதீஸ்வரன் மூன்றாமிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குறுவ ட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான நடந்த தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா கழக துணைத்தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த மணிபாரதி, தட்டு எறிதலில் முதலிடம் பிடித்த விஜய், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பிடித்த ஜெகதீஸ்வரன் மற்றும் குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன், ஆசிரியர் நாகராஜன்ஆகியோரையும் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லை.
    • பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணிசூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் கோடி யக்காட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் உப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் பணிச்சூழல், பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகிய குறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    இதுகுறித்து மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-

    உப்பள தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அலகுகளில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார்.

    நுண்ணீர் பாசன கம்பெனியின் மண்டல மேலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கி யத்துவம் பற்றியும் விவசாயி களுக்கு எடுத்து ரைத்தார்.

    துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் நடப்பு சம்பா சாகுபடியில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்வது பற்றி எடுத்து ரைத்தார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிந்து மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மின்சாரம், தோட்டக்கலை உள்பட பல துறை அதிகாரிகள் தங்களது துறைகளில் உள்ள திட்டம் குறித்து விளக்கினர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும், வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வாரப்பட வேண்டும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தகட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பேசியதாவது:-

    விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேதாரண்யம் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டு, வடிகால் பகுதிகளில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    துணை தாசில்தார் மாதவன் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் தனித்துறை ரமேஷ் நன்றி கூறினார்.

    • குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
    • முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி திருவளர் மங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.

    குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    நிறைவு நாளான நேற்று மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சண்டியாக பெருவிழா நடைபெற்றது.

    முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, கோ தனம், மண்டப பலி, மகாபூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து பைரவர் பலி தானங்கள், சுவாசினி, வடுக பூஜை, பட்டுப்புடவை ஹோமம், மகாபூர்ணஹீதி, தீபாராதனை, கலசாபிஷேகம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.
    • பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இன்டராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க பள்ளி) கார்த்திகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாகை வனச்சரகர் ஆதி லிங்கம் மாணவர்களுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் "சுற்றுச்சூழல் காப்பதில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். வேளாங்கண்ணி ரோட்டரி கிளப் சார்பில் ஐந்து இரும்பு கூண்டுகள் வழங்கப்பட்டன.

    இன்டராக்ட் சங்க தொடக்க விழாவில் ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர் சாமிநாதன், பிரகாஷ், அனுஷா நீலகண்டன், ஆராமுதன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவிகள் சுதர்ஷினி மற்றும் ஹரிணி இன்ட்ராக்ட் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமைப்படை பள்ளி பொறுப்பாசிரியர் கயிலை ராஜன் நன்றி கூறினார்.

    பின்னர் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்களுக்கு நூறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • மகாராஜபுரம் வயல்வெளியில் ஐயப்பன் என்பவர் வலை வைத்து 6 மடையான் பறவைகளை பிடித்தார்.
    • போலீசார் விசாரணை செய்து வழக்குபதிவு செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மகாராஜபுரம் பகுதியில் திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வனஉயிரின காப்பாளர் (கூடுதல் பொ) தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் உத்தரவின் பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனவர் ராமதாஸ், மகாலெட்சுமி, வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், நவநீத கிருஷ்ணன், பாண்டியன் குழுவினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து 6 மடையான் பறவைகள் பிடித்த தலைக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 40) என்பவரை பறவைகள் மற்றும் வலைகளுடன் பிடித்து விசாரணை செய்து வழக்குபதிவு செய்யப்பட்டு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பின்பு, அவரிடமிருந்த 6 மடையான் பறவைகளை கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் மற்றும் வன பணியாளர்கள் முன்னிலையில் முனியப்பன் ஏரி சரணாலய பகுதியில் பறக்கவிட்டப்பட்டது.

    • பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் திருக்குவளை தாலுகா பண்ணைத் தெருவில் அமைந்துள்ள பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அலமாரியின் பூட்டை உடைத்து பார்த்தனர். அதில், வள்ளி உலோக சிலை (உயரம் 38.5 செ.மீ., அகலம் 16 செ.மீ., எடை 7.3 கிலோ) புவனேஸ்வரி அம்மன் (உயரம் 30 செ.மீ., அகலம் 13 செ.மீ., எடை 6.2 கிலோ) திருஞான சம்பந்தர் (உயரம் 43 செ.மீ., அகலம் 12 செ.மீ., எடை 9.4 கிலோ) ஆகிய 3 சிலைகள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சிலைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்-யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது சமிக்ஜை செய்தும் நிற்காமல் விசைப்படகு சென்றதாக கூறி இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை வானகிரியை சேர்ந்த மீனவர் வீரவேல் (வயது 31) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மேலும் விசைப்படகு மீதும் பல குண்டுகள் பாய்ந்தன.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வீரவேல் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்கள் காயத்துக்கு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள் விசைப்படகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து படகை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஷ வண்டுகள் பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு.
    • நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் விஷ வண்டுகள் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    உடன் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி செயலர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாச னிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.

    மனுவின் பேரில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு போலீசார் இணைந்து கங்களாஞ் சேரிரியில் காலனி தெரு, பூண்டி, கீழத்தெரு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    • சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவில்லை.
    • சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.

    இவரது மனைவி கோமதி (வயது 45).

    இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு குண்டையூர் செல்லும் பாலம் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது.

    சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவி ல்லை. பல இடங்களில் தேடி பார்த்து ம் கண்டுபிடிக்க முடியவி ல்லை.

    இந்த நிலையில் சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுக் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×