என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன்.
மகா மாரியம்மன் கோவிலில் சண்டியாக பெருவிழா
- குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
- முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி திருவளர் மங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
நிறைவு நாளான நேற்று மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சண்டியாக பெருவிழா நடைபெற்றது.
முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, கோ தனம், மண்டப பலி, மகாபூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து பைரவர் பலி தானங்கள், சுவாசினி, வடுக பூஜை, பட்டுப்புடவை ஹோமம், மகாபூர்ணஹீதி, தீபாராதனை, கலசாபிஷேகம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






