என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 4607 குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வங்கி செயலாளர் அசோகன் மற்றும் கூட்டுறவுசங்க துணை தலைவர் செந்தில் இயக்குனர் மதியழகன், சிங்காரவேலு மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராமநாதன், வீரமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

    இதே போல் வாய்மேடு, அங்காடியில் மாவட்ட தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

    இதே போல் தகட்டூர், தாணிக்கோட்டகம் கருப்பம்புலம் ஆகிய ஊராட்சிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தகட்டூர்கூட்டுறவு சங்க தலைவர் நெடுஞ்செ ழியன்கூட்டுறவு சங்க செயலாளர்கள் மதியழகன் தாணிகோட்டகம் தெட்ச ணமூர்த்தி கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
    • வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நத்தப்பள்ளம் ஊராட்சியில் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் நாகப்பட்டினம் கோட்டம் உதவி இயக்குனர் அசன் இப்ராஹீம் வழிகாட்டுதல் படி நடைபெ ற்ற முகமாமிற்கு தலைஞாயிறுஒன்றிய குழு தலைவர் தமிழரசிதலைமையில் வதித்தார்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஆதிரவிச்சந்திரன் முன்னிலையில் வகித்தார் ஊராட்சி செயலாளர் வீரையன் வரவேற்றார்.

    வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    மேலும் நீர்முளை புனித சவேரியார் மேல் நிலைப் பள்ளியில் 150 மாணவர்களுக்கு வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீதர் பாபு, சண்முகநாதன், திவாகர் கால்நடை ஆய்வாளர் கருணாநிதி உதவியாளர் நல்ல தம்பி,மாலா ஊராட்சி துணைத் தலைவர் ரேவதி மற்றும் கிராமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது.
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவுசங்களின் கூடுதல் பதிவாளர் குமார் ஆய்வு செய்தார் ஆய்வின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபடும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் அரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அளவு சரியாக உள்ளதா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார் பின்பு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து கிராமபு ரத்தில் 4 கோடி ருபாய் டெபாசிட் வைத்து சிறப்பாக பொதுமக்களக்கு சேவையாற்றும் மருதூர் தெற்கு கூட்டுறவு சங்க அதிகாரிகளைபாராட்டினர்

    பின்பு கடந்த ஆண்டு நவம்பர் 12ந் தேதிஇந்த வங்கியில் நடைபெற்ற வங்கி கொள்ள முயற்சி குறித்து கேட்டறிந்தார் பின்பு தற்போது வங்கிக்குகூடுதல் பாதுகாப்பு காவலர் அறை ஆகியவற்றை பார்வை யிட்டார் ஆய்வின்ன்போது மண்டல இணை பதிவாளார் அருள் அரசு, கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகபிரியா கூட்டுறவு சங்க தலைவர

    சோமசுந்தரம் இயக்குனர் உதயம் முருகையன் செயலாளர்கள் அசோகன்' வீரமணி உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டார் இதே போல் வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம், ஆதனூர், வேதாரண்யம்-தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டர் பின்பு செய்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் பதிவாளர் குமார் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவிதம் வழங்கப்பட்டுவிட்டது நேற்று வரை 70 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்டுவிடும் என்றார்

    • 120-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பொது–மக்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுறுத்தல்படி நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் பெரோஸ் முகமது, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை உதவி மருத்துவர் முத்துகுமரன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் கால்நடை உதவி மருத்து–வர்கள் பிரியதர்ஷினி, சிவப்பிரியா, அருண், பூபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் விலங்குகள் வதை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் கட்டுமாவடி, புறாக்கிராமம், தண்டாளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த 120-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி, கால்நடை ஆய்வாளர் பாரிவேந்தன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
    • முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்டத்திற்குள்ளான பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

    திருமருகல் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வக்குமார் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தபடும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர் ஏழுமலை எடுத்துரைத்தார்.

    காம்கோ கம்பெனி டீலர் சங்கரநாராயணன் தங்கள் நிறுவனத்தில் உள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கூறினார்.

    முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு மற்றும் ராஜ்குமார் செய்திருந்தனர்.

    • தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்றது.

    தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும், தலைஞாயிறு பேரூராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், ஒன்றிய குழுதலைவர் தமிழரசி, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆருர் மணிவண்ணன், கற்பகம் நீலமேகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் அன்பரசு, ஜெய்சங்கர், பாரிபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா, இளைஞர் அணி விக்னேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை கலெக்டரிடம் கொடுத்து விழிப்புணர்வு.
    • அனைவரும் மண்பானை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனம் மற்றும் மகரிஷி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து நேற்று மண்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் கல்லூரி இயக்குநர் பேசுகையில், நமது முன்னோர்கள் மண்பானையில் பயன்படுத்தி உணவுகள் உண்டதால் அவர்கள் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமாக வாழ்ந்து வந்தனர் என்றார்.

    கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசும்போது, தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த விழிப்புணர்வு மிகவும் ஏற்றதக்க வகையில் இருக்கிறது. மண்பானை செய்யக்கூடிய தொழிலாளர்கள் நலமும் வளமும் பெற அனைவரும் மண்பானையினை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் தாளாளர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜீ, முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்திரா மற்றும் துறை தலைவர்கள் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
    • வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் நடப்பு சம்பா, தாளடி நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது.

    இதன் அறிகுறிகள் என்ன வென்றால் நெற்கதிரில் உள்ள இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.

    தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

    இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்தும் முறைகளாவது நெல்வயல்களில் தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பஎண்ணை ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

    மேலும் பூச்சிச்கொல்லியை கட்டுப்படுத்த அசிபேப் அசார்டியாக்டின் குளோரோடேரேனிலிபுருள் புளுபென்டிமைட் தையமீத்தாக்கம் மருந்துகளை தெளித்து இலை சுருட்டு புழுவை கட்டுபடுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 1 மோட்டார் சைக்கிள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடவாசல் பருத்தியூர் ரோட்டு தெருவை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 23), ரஞ்சித் (21) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் குடவாசல் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் உத்தூர் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் கடத்திய சிக்கல் பனைமேடு காலனி தெருவை சேர்ந்த அஜித் (வயது 24) தனுஷ் (21) ஆகிய இருவரையும் கைது செய்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை சாகுபடி அவசியம்.
    • நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் வேளாண் விளை நிலங்களில் மண்வளத்தை அதிகரித்திடவும் குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை பயிர்கள் சாகுபடி அவசியமாகும்.

    சம்பா நெல் அறுவடைக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய ஏதுவாக தலைஞாயிறு வட்டாரத்திற்குட்பட்ட தலைஞாயிறு, நீர்முளை, பனங்காடி மற்றும் கொத்தங்குடி ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதனை மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் கிலோ ரூ. 118 என்பதில் இருந்து மானிய தொகை ரூ. 48 கழித்து ரூ. 70 விலையில் பயறு விதைகளை பெற்று பயனடையலாம். மேலும், நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தினார்.
    • பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    அப்போது, வாழ்குடி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் அந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது.
    • சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெற செய்த மாஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    புதுவை உப்பளம் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கில் அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

    அதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்பார்க் அகாடெமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற டேக்வாண்டோ போட்டி களில் இம்மாணவர்கள் 13 தங்க பதக்கமும், 12 வெள்ளி பதக்கமும், 17 வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.

    தேசிய அளவில் புதுச்சேரி மாணவர்கள் முதலிடமும் தமிழ்நாடு மாணவர்கள் (நாகப்பட்டினம்) 2வது இடமும் கர்நாடகா மாநிலம் 3-வது இடத்தை யும் பெற்றுள்ளனர்.

    குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெறச் செய்த மாஸ்டர் பாண்டியனுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    ×