என் மலர்
நீங்கள் தேடியது "pot"
- செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளைகுடியிறுப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மண்பாண்ட தொழிலே பிரதான தொழிலாகும்.
- பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடுபிடித்துள்ளது.
செங்கோட்டை:
செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளைகுடியிறுப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மண்பாண்ட தொழிலே பிரதான தொழிலாகும்.
இங்கு மண்னால் தயாரிக்கப்படும் அடுப்பு வகைகள், மண்பானைகள், மண்சட்டிகள், பூந்தொட்டி வகைகள், அகல் விளக்குகள் போன்றவைகள் தயாரித்து உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர் .
மண் பானைகள், அடுப்புகள் செய்வதையே தங்கள் தொழிலாக செய்து குடும்பம் நடத்தியதோடு தங்கள் குழந்தைகளுக்கும் அதையே கற்று கொடுத்து வந்துள்ளனர் இப்பகுதி மண்பாண்ட தொழிலாளார்கள்.
சுற்று வட்டார பகுதிகளில் இத்தொழிலை நம்பி சுமார் 400 குடும்பங்கள் வரை பார்த்து வந்த இந்த தொழில் தற்போது நலிவடைந்து 50 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வாரத்திற்கு 1,000 பானைகள் வரை உற்பத்தி செய்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனை வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது பொங்கல் சீசனை தொடர்ந்து செங்கோட்டையை அடுத்துள்ள காலங்கரை, தேன்பொத்தை கட்டளைகுடியிருப்பு, இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொங்கலுக்கான பானைகள், அடுப்பு, மண்சட்டி, பானை, பொங்கல்கட்டி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடுபிடித்துள்ளது.
இது குறித்து தொழிலாளிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலோர் பித்தளை, சில்வர் பாத்திரங்களிலேயே பொங்கல் வைக்கும் பழக்கத்திற்கு வந்துவிட்டனர். கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ. 50 முதல் ரூ. 150 வரை பானைகள் விற்கப்பட்டது.
ஆள்பற்றாக்குறை, குளங்களில் மண் அள்ள தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பது, கடந்தாணடில் பெய்த தொடர்மழையால் செய்த பானைகளை பாதுகாக்க இடமின்மை போன்ற பல்வேறு பிரச்சிைன காரணமாக இத்தொழிலில் பெரிய அளவில் வருமானமும் கிடைப்பது இல்லை.
தற்போது பொங்கல் சீசன் என்றாலும் தமிழகத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர்களும் வருவதில்லை.
அதிக அளவில் பொங்கல் பானைகள் கேரள மாநிலத்திற்கே ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு முறையே தயார் செய்த பனைகள் தற்போது ரூ. 70 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது.
வரும் காலங்களில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பானைகளையும் சேர்த்து வழங்கினால் எங்களது வாழ்வாதாரம் பெரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை கலெக்டரிடம் கொடுத்து விழிப்புணர்வு.
- அனைவரும் மண்பானை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும்.
நாகப்பட்டினம்:
தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனம் மற்றும் மகரிஷி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து நேற்று மண்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கல்லூரி இயக்குநர் பேசுகையில், நமது முன்னோர்கள் மண்பானையில் பயன்படுத்தி உணவுகள் உண்டதால் அவர்கள் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமாக வாழ்ந்து வந்தனர் என்றார்.
கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசும்போது, தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த விழிப்புணர்வு மிகவும் ஏற்றதக்க வகையில் இருக்கிறது. மண்பானை செய்யக்கூடிய தொழிலாளர்கள் நலமும் வளமும் பெற அனைவரும் மண்பானையினை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் தாளாளர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜீ, முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்திரா மற்றும் துறை தலைவர்கள் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பணியாளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
- பிச்சை பாத்திரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பருவகால பணியாளர்கள் பானை, தட்டில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் 2022-23 சம்பா பருவம் தொடங்கப்பட்டுள்ளதால் கொள்முதல் பணியை மேற்கொள்ள பணியா ளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யாத நெல்லில் ஏற்படும் எடை இழப்பை இயக்கம் செய்யாத துணை மேலாளர், உதவி மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோ ரை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
சேமிப்பு கண்களுக்கு இயக்கம் செய்யப்பட்ட நெல் இறங்கிய மறுநாள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும்.
பருவகால பணியாளர்களின் சம்ப ளத்தை பிரதி மாதம் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிச்சை பாத்தி ரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநிலத் துணைப் பொருளாளர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் தயாளன், துணைச் செயலாளர் பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் தேவசேனா (வயது1½). நேற்று தேவசேனா வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் நிரம்பிய பானையில் கைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அவரது தாயார் வெளியே சென்றதாக தெரிகிறது.
இந்த நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த தேவசேனா திடீரென்று தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாயார் மகளை மீட்டார். அப்போது தேவசேனா சரியாக மூச்சுவிட முடியாமல் திணறினாள்.
உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி தேவசேனா பரிதாபமாக இறந்தாள்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.