search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள்
    X

    பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பருவகால பணியாளர்கள்.

    தஞ்சையில், நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள்

    • பணியாளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
    • பிச்சை பாத்திரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பருவகால பணியாளர்கள் பானை, தட்டில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் 2022-23 சம்பா பருவம் தொடங்கப்பட்டுள்ளதால் கொள்முதல் பணியை மேற்கொள்ள பணியா ளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

    கொள்முதல் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யாத நெல்லில் ஏற்படும் எடை இழப்பை இயக்கம் செய்யாத துணை மேலாளர், உதவி மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோ ரை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.

    சேமிப்பு கண்களுக்கு இயக்கம் செய்யப்பட்ட நெல் இறங்கிய மறுநாள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும்.

    பருவகால பணியாளர்களின் சம்ப ளத்தை பிரதி மாதம் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிச்சை பாத்தி ரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநிலத் துணைப் பொருளாளர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் தயாளன், துணைச் செயலாளர் பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×