தஞ்சையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்- பரபரப்பு

எம்.ஜி.ஆர். நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா மாற்றம் செய்துதர வேண்டும்.வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை ஒன்றியம் மணக்கரம்பை ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா மாற்றம் செய்திட வேண்டும், வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்நை ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மாநகர குழு ராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் விளக்க உரையாற்றினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடுப்பு, பாத்திரம், பாய், தலையணை உள்ளிட்டவற்றுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com